011 202 4848

செய்திகள்

HNB FINANCE புத்தளம் கிளை தமது புதிய கட்டடத்துக்குள் நுழைகிறது

19 வருடகாலமாக இலங்கையிலுள்ள வாடிக்கையாளா;களுக்கு நெகிழ்வான நிதி சேவைகளை வழங்கிய HNB FINANCE நிறுவனத்தின் புத்தளம் கிளையை இல. 44/A, சேர்விஸ் றோட் புத்தளம் என்ற விலாசத்தில் அமைந்துள்ள மிகவூம் இடவசதிகளுடன் கூடிய நிறுவனத்திற்கே உரிய கட்டடத்திற்கு அண்மையில் இடமாற்றியூள்ளது.
புதிய HNB FINANCE புத்தளம் கிளை மற்றும் தங்கக் கடன் சேவைகள் ஆகியவற்றை HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்தினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு HNB FINANCE இன் பிரதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி பிரியால் அரங்கல பிரதி பொது முகாமையாளர்; மற்றும் பிரதான மனித வள அதிகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தங்கக் கடன் துறையானது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையில் பிரபலமடைந்திருந்தாலும் முறைப்படி மற்றும் நம்பிக்கையாகவும் இந்த சேவையை வழங்குவதற்காக முன்வந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் HNB FINANCE நிறுவனம் வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளமைக்கு காரணம் வாடிக்கையாளர்களுக்காக காட்டும் அக்கறை மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் உள்ள சிறந்த சேவை போன்ற விடயங்களாகும். விசேடமாக HNB FINANCE மூலம் வழங்கப்படும் அனைத்து நிதி சேவைகள் போன்றே HNB FINANCE தங்கக் கடன் சேவைகளையும் மிகவும் துரிதமாக வாடிக்கையாளா;களின் பாராட்டுக்கள் மற்றும் ஈர்;ப்பினையும் வென்றெடுப்பதற்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே விசேட செயற்திறன் நிறுவனத்திற்கு மற்றும் சமூகத்திற்கு வழங்கிய HNB FINANCE புத்தளம் கிளையின் சேவைகளை உகந்த விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமக்கே உரிய இந்த சூழலும் காரணமாக அமைந்துள்ளது என நான் நம்புகின்றேன். விசேடமாக விவசாய மற்றும்

கடற்றொழிலுடன் நெருங்கிய பொருளாதார சூழல் ஒன்று காணப்படும் புத்தளம் நகருக்குள் எமது சேவையை இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக மிகவும் ஒத்துழைப்பு வழங்குமென நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளா;களுடன் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை இணைப்பின் அடிப்படையில் மிகவூம் இடவசதிகளுடன் கூடிய புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு பிரவேசிப்பதற்கு HNB FINANCE புதிதாக ஆரம்பித்த தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகளுடன் அனைத்து நிதி சேவைகளையூம் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், கல்வி கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன் நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.