சிரேஷ்ட மேலாளர்

அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட மேலாளர் நிர்வாகக்குழு

எமது நிறுவனத்தின் சீரான செயல்பாட்டு ஓட்டத்திற்காக கூட்டு பொறுப்புடையவர்கள். எங்கள் சிரேஷ்ட மேலாளர் நிர்வாக குழுவில் HNB நிதிக்கு முதுகெலும்பாக செயல்படத்தக்கதான வலுவான, அர்ப்பணப்புடன் செயல்படும் தனிநபர்களை உள்ளடக்கியுள்ளது.

திரு. டபிள்யூ. எஸ். பி. அரங்கல பிரதான தொழிற்பாட்டு உத்தியோகத்தர்

திரு. பிரியலால் அரங்கல அவர்கள் நிதித் துறையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் இதில் 13 வருடங்களாக......

திரு. டபிள்யூ. எஸ். பி. அரங்கல | பிரதான தொழிற்பாட்டு உத்தியோகத்தர்

திரு. பிரியலால் அரங்கல அவர்கள் நிதித் துறையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் இதில் 13 வருடங்களாக நுண் நிதித் துறையில் சேவையாற்றியுள்ளார். மலேசியா ரூடவ் பல்கலைக்கழத்தில் விஞ்ஞான முதுமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதுடன் அவரிடம் காணப்படுகின்ற நிதித் துறை தொடர்பான ஆழ்ந்த அறிவு மற்றும் நுண்நிதிக் கைத்தொழில் சம்பந்தமான விரிவான அனுபவங்களின் அடிப்படையில் அவர் கம்பனியின் முன்வரிசை பதவியான பிரதான தொழிற்பாட்டு உத்தியோகத்தர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் ஊடாக அனுமதிப்பத்திர நிதிக் கம்பனிக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கு முதன்மையானதும் மற்றும் மையப்படுத்தியதுமான பணிகளை திரு. அரங்கல அவர்கள் மேற்கொண்டார். அவரது பங்களிப்பை வரவேற்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு அவர் கம்பனியின் பணிப்பாளர் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முதல் திரு. அரங்கல அவர்கள் கிராமின் கூட்டு தொழில்முயற்சியின் மற்றும் பினான்ஸ் மைக்ரோ கிரடிட் கம்பனியின் பணிப்பாளர் சபையிலும் சேவையாற்றியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஜுன் மாதமளவில் முன்னனி ஆதன விற்பனை நிறுவனமான பிரைம் லேண்ட் தனியார் கம்பனியினால் இந்தக் கம்பனியின் நிருவாகப் பணிகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கம்பினியில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டமைப்பின் பின்னர் அவர் பணிப்பாளர், முகாமையாளர் தகவல் முறைமை மற்றும் இணக்கப்பாடு பதவியில் நியமிக்கப்பட்டதுடன் கம்பனியின் நிருவாகப் பணிகள் எச்.என்.பீ பீ.எல்.சீ நிறுவனம் பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதிப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முகாமைத்துவத்தை மீள் கட்டமைப்பதற்காக இடமளிக்கும் பொருட்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுயமாகவே குறித்த பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

திரு. அரங்கல அவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற வணிகக் கணக்காளராவார். வியாபாரக் கற்கை, கணக்கியல் மற்றும் கணக்காய்வு டிப்ளோமாதாரியான அவர் இலங்கை கணக்கியல் கற்கை நிறுவனத்தின் (AAT) அங்கத்தவரும் சான்றிதழ் பெற்ற தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தின் (FCPM) சான்றிதழ் பெற்ற தொழில்சார் முகாமையாளருமாவார். இலங்கையின் முன்னனி கணக்காய்வு நிறுவனங்களில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ள அவர் கணக்காய்வு தொடர்பில் 18 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார்.

திரு. எனஸ்லி பெர்ணாந்து பிரதிப் பொது முகாமையாளர் - தொழிற்பாடு

நுண்நிதித் துறையில் சுமார் 18 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. எனஸ்லி பெர்ணாந்து அவர்களிடம் உள்ள......

திரு. எனஸ்லி பெர்ணாந்து | பிரதிப் பொது முகாமையாளர் – தொழிற்பாடு

நுண்நிதித் துறையில் சுமார் 18 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. எனஸ்லி பெர்ணாந்து அவர்களிடம் உள்ள அறிவு மற்றும் ஆற்றலின் ஊடாக நிறுவனத்தின் அனைத்து தொழிற்பாடுகளும் சிறந்த விதத்தில் மேற்கொள்ளப்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர் அனைத்துத் துறைகளிலும் நுண்நிதி தொழில்சார்பாளராக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக உள்ளார். திரு எனஸ்லி அவர்கள் நுண்நிதி விடயம் தொடர்பான டிப்ளோமாதாரிவுமாவார்.

 

திரு. ருவன் பெர்ணாந்து பிரதிப் பொது முகாமையாளர் - மனித வளங்கள் மற்றும் நிருவாகம், பிரதான மனித வள உத்தியோகத்தர்

திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 18 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின்......

திரு. ருவன் பெர்ணாந்து | பிரதிப் பொது முகாமையாளர் – மனித வளங்கள் மற்றும் நிருவாகம், பிரதான மனித வள உத்தியோகத்தர்

திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 18 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின் நுண்நிதித் துறையில் தனது தொழிலை ஆரம்பித்ததுடன் திரு. ருவன் பெரேரா அவர்கள் மனித வள முகாமைத்துவ விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தேர்ச்சியின் ஊடாக தான் நிறுவனத்துக்குத் தேவையான வளம் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் வணிக நிருவாகம் தொடர்பான பட்டதாரியாவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தற்பொழுது வகிக்கின்ற பதவியின் ஊடாக தனது அனுபவத்தையும் நுட்பத்தையும் குறித்த துறைக்கு வழங்கியதன் ஊடாக பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.

திரு. பிமல் செனவிரத்ன பிரதிப் பொதுமுகாமையாளர் – Liability Sales

திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில்......

திரு. பிமல் செனவிரத்ன | பிரதிப் பொதுமுகாமையாளர் – Liability Sales

திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ள அவர் நிதி உற்பத்தி சந்தைப்படுத்தலில் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதுடன் தான் பதவி வகிக்கும் நிறுவனத்தின் சொத்து என இந்த நிறுவனத்தின் இருப்பில் தடம் பதித்துள்ளார்.

 

திரு. ஆர். எம். பீ. தயாவங்ச பிரதிப் பொதுமுகாமையாளர் - வர்த்தகம்

திரு. தயாவங்ச அவர்கள் ஹட்டன் நஷனல் வங்கியின் வங்கிக் கிளை பிராந்திய முகாமைத்துவம். சந்தைப்படுத்தல், குத்தகை, சில்லறை......

திரு. ஆர். எம். பீ. தயாவங்ச | பிரதிப் பொதுமுகாமையாளர் – வர்த்தகம்

திரு. தயாவங்ச அவர்கள் ஹட்டன் நஷனல் வங்கியின் வங்கிக் கிளை பிராந்திய முகாமைத்துவம். சந்தைப்படுத்தல், குத்தகை, சில்லறை, வணிக வங்கியியல் மற்றும் பண வைப்புகள் போன்ற பல துறைகளில் 34 வருடங்களுக்கும் மேற்பட்ட விரிவான அனுபவங்களைக் கொண்ட வங்கியியல் தொழில்சார்பாளராவார். அவர் அவுஸ்திரேலியாவின் Mt. Eliza Executive Education, Melbourne Business School, Australia, National University of Singapore (NUS) மற்றும் Singapore Institute of Management (SIM) ஆகிய நிறுவனங்களில் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அவர் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவராகவும் பணி புரிந்துள்ளார். முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் (PIM) வணிக நிர்வாகம் தொடர்பான முதுமானிப் பட்டமும் பெற்றுள்ள அவர் இலங்கை வங்கியாளர்களின் நிறுவனத்தின் (FIB) அங்கத்தவரும், பட்டய சந்தைப்படுத்துநரும், ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்துநர் நிறுவனத்தின் (FCIM) அங்கத்தவரும் இலங்கை சந்தைப்படுத்துநர் நிறுவனத்தின் (FSLIM) அங்கத்தவருமாவார்.

திரு. கமல் பிரியங்க உதவிப் பொது முகாமையாளர் - கிளை வலையமைப்பு

திரு. கமல் அவர்கள் 18 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் நுண்நிதித் துறையில் ஈடுபடுபவராவார். அவர் எச்.என்.பீ கம்பனியின் ஊடாக தனது......

திரு. கமல் பிரியங்க | உதவிப் பொது முகாமையாளர் – கிளை வலையமைப்பு

திரு. கமல் அவர்கள் 18 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் நுண்நிதித் துறையில் ஈடுபடுபவராவார். அவர் எச்.என்.பீ கம்பனியின் ஊடாக தனது தொழிலை ஆரம்பித்ததுடன் குறித்த நிறுவனம் மற்றும் தொழில்துறை தொடர்பில் அவரது தெளிவான அர்ப்பணிப்பு, சேவை அனுபவங்கள் ஊடாக அவர் பெற்றுக் கொண்ட அறிவு மற்றும் தேர்ச்சியின் காரணத்தால் நிறுவனத்தில் பதவியுயர்வுகளை அவர் பெற்றுக் கொள்ளுவதற்கு முடியுமானதுடன் தொழில்துறையில் தனது ஆற்றல் தொழில்சார் தகைமையைக் கொண்ட அவர் ஒரு நுண்நிதித்துறை தொடர்பான டிப்ளோமாதாரியுமாவார்.

திரு. மஹிந்த திஸ்ஸ உதவிப் பொது முகாமையாளர் - நுண்நிதி

நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஹிந்த அவர்கள் இந்த நிறுவனத்தில் தற்பொழுது......

திரு. மஹிந்த திஸ்ஸ | உதவிப் பொது முகாமையாளர் – நுண்நிதி

நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஹிந்த அவர்கள் இந்த நிறுவனத்தில் தற்பொழுது வகிக்கின்ற பதவில் தொழில்துறையின் முக்கிய துறைகளில் இருந்த அனுபவத்துடன் செயற்படுபவராவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தனது தொழிலை ஆரம்பித்து அவர் நுண்நிதித் துறையை நெறிப்படுத்துவதற்கு உரிய பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்ட அனுபவத்தைப் பெற்றவராவார். அவருடைய அனுபவத்துக்கு மேலதிகமாக நுண்நிதித் துறை தொடர்பான டிப்ளோமா சான்றிதழின் ஊடாக தொழில்சார் தகைமையையும் பெற்றுள்ளார்.

திரு. பெத்தும் சம்பத் குரே உதவிப் பொதுமுகாமையாளர் - கிளை வலையமைப்பு

நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட......

திரு. பெத்தும் சம்பத் குரே | உதவிப் பொதுமுகாமையாளர் – கிளை வலையமைப்பு

நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட அம்சங்கள் தொடர்பான தேர்ச்சியையும் பெற்றுள்ளார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடனான அவரது சேவைக்காலம் 2001 ஆம் ஆண்டு வெளிக்கள நிறைவேற்றுநராக ஆரம்பித்து அவரிடம் காணப்பட்ட தெளிவான தேர்ச்சியின் காரணத்தால் ஒழுங்குமுறையாக அவரது தற்போதைய பதவி வரை முன்னோக்கிப் பயணித்துள்ளார். அவர் நுண்நிதித் துறை [DMF(IBSL/FS)] டிப்ளோமாதாரியாவதுடன் கடன் முகாமைத்துவம் தொடர்பான உயர் டிப்ளோமாதாரியுமாவார்.

 

திரு. பிரபாத் கத்திரிஆரச்சி உதவிப் பொதுமுகாமையாளர் - கிளை வலையமைப்பு

திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து......

திரு. பிரபாத் கத்திரிஆரச்சி | உதவிப் பொதுமுகாமையாளர் – கிளை வலையமைப்பு

திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட காலப்பகுதிக்குள் அவர் பிரதான தொழிற்பாட்டு துறை தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு அறிவினைப் பெற்றுக் கொண்டார். 17 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் தனது வணிக அறிவு மற்றும் எண்ணக்கருவின் ஊடாக அவர் தொடர்ச்சியாக வணிகப் பணிகளில் ஈடுபடுகின்றார். அவர் நுண்நிதித் துறை தொடர்பான டிப்ளோமாதாரியும் [DMF (IBSL/FS)], கடன் முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமாதாரியும் மற்றும் முகாமைத்துவ கற்கை நிறுவனத்தின் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாதாரியுமாவார்.

 

திரு. பிரதீப் டயஸ் உதவிப் பொதுமுகாமையாளர் - பிரதான தகவல் உத்தியோகத்தர்

24 வருடங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறை அனுபவத்துடன் முன்னணி......

திரு. பிரதீப் டயஸ் | உதவிப் பொதுமுகாமையாளர் – பிரதான தகவல் உத்தியோகத்தர்

24 வருடங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறை அனுபவத்துடன் முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் தொடர்பான தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குகின்றவருமாவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடனான சேவைக்காலம் மூன்று வருடங்களுக்கும் மேற்பட்டதாகும். முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வணிக முகாமைத்துவ டிப்ளோமாதாரியான அவர் British Computer Society இன் அங்கத்தவரும், CISCO மற்றும் Microsoft சான்றிதழ் பெற்ற தொழில்சார்பாளருமாவார்.

 

திரு. பானு விஜயரத்ன உதவிப் பொது முகாமையாளர் – Risk

Hatton National Bank Plc., Union Bank of Colombo Plc. மற்றும் HNB Finance Ltd. ஆகிய நிறுவனங்களில் முதல் குறிப்பிட்ட இரண்டு வங்கிகளிலும் முறையே பிரதான......

திரு. பானு விஜயரத்ன | உதவிப் பொது முகாமையாளர் – Risk

Hatton National Bank Plc., Union Bank of Colombo Plc. மற்றும் HNB Finance Ltd. ஆகிய நிறுவனங்களில் முதல் குறிப்பிட்ட இரண்டு வங்கிகளிலும் முறையே பிரதான இணக்கப்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் உள்ளக கணக்காய்வுக் குழுத் தலைவராகவும் பணி புரிந்து எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின் உதவிப் பொது முகாமையாளர் – (Risk) பதவியில் பணி புரிந்து கொண்டு செயல்நுணுக்கமான முக்கிய பல துறைகளை உள்ளடக்கியவாறு பணி புரிகின்ற திரு. பானு விஜயரத்ன அவர்கள் 38 வருடங்களுக்கு மேற்பட்ட வங்கியியல் மற்றும் நிதியியல் தொடர்பான விரிவான அனுபவங்களைக் கொண்டவராவார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதிப் பொருளாதாரம் தொடர்பான பட்டப்பின் படிப்பு பட்டதாரியும் இந்தியாவின் Manipal பல்கலைக்கழகத்தின் வணிக நிருவாகம் தொடர்பான பட்டப்பின் படிப்பு பட்டதாரியுமாவார். இலங்கை வங்கியாளர்களின் நிறுவனத்தின் அங்கத்தவருமான அவர் Institute of Certified Professional Managers நிறுவனத்தின் அங்கத்தவருமாவார். மேலும் அவர் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் உள்ளக கணக்காய்வாளர் நிறுவனத்தின் இலங்கை தரப்பு அங்கத்தவருமாவார்.

சிரேஷ்ட உப தலைவர் பதவி உட்பட பிரதான பதவிகள் பல வகித்த அவர் தற்பொழுது இலங்கை தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை சபை அங்கத்தவராகவும் பணி புரிகின்றார். இவர் இலங்கை வங்கி இணக்கப்பாட்டு உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவராகவும் கடமை புரிந்துள்ளார்.

வங்கியியல் மற்றும் நிதித் துறையில் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் தற்பொழுது இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் வங்கியியல் மற்றும் நிதிக் கல்வியியல் கல்லூரியின் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வங்கியியல் கற்கை பீடத்தின் வெளிப்பீட அங்கத்தவராகவும் பணி புரிகின்றார். மேலும் அவர் இலங்கை மன்றத்தின் விரிவுரையாளராகவும், நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், பணி புரிந்துள்ளதுடன் பல்வேறு வணிகத் தொகுதிகளுக்கும் தொழில்சார் சஞ்சிகைகளுக்கும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

திரு. மஞ்ஜுல குமார முனசிங்க வணிக முறைமை அபிவிருத்தி பிரதானி

நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக......

திரு. மஞ்ஜுல குமார முனசிங்க | வணிக முறைமை அபிவிருத்தி பிரதானி

நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தனது தொழிலை ஆரம்பித்தார். நிறுவனத்தில் சேவையாற்றும் போது பொதுவாக கைத்தொழில் துறையில் குறிப்பாக அது சார்ந்த எண்ணக்கரு மற்றும் கணக்கியல் தொடர்பாக விரிவான மற்றும் மதிப்பிட முடியாத அனுபவங்களைக் கொண்டவராவார்.

திரு. எச். டீ. சமீர சந்திரநாத் குணசேகர பிரதான கணக்காளர் நிதிப் பிரிவின் பிரதானி

நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக்......

திரு. எச். டீ. சமீர சந்திரநாத் குணசேகர | பிரதான கணக்காளர் நிதிப் பிரிவின் பிரதானி

நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். வணிகம் மற்றும் கணக்கியல் தொடர்பான நிறைவேற்று டிப்ளோமா மற்றும் வணிகம் மற்றும் நிதி தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் கொண்டுள்ளார்.

திரு. அனுர உடவத்த பயிற்சி பிரதானி

கைத்தொழில் துறையில் 14 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவம்......

திரு. அனுர உடவத்த | பயிற்சி பிரதானி

கைத்தொழில் துறையில் 14 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவம், பயிற்சி மற்றும் அபிவிருத்தி துறையில் தேர்ச்சி பெற்றவராவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் சேவையாற்றியதன் ஊடாக பெற்றுக் கொண்ட நுண்நிதித் துறை அனுபவத்தின் மூலம் கைத்தொழில் துறைக்குத் தேவையான ஆற்றலை அவர் பெற்றுக் கொண்டார். திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவ சான்றிதழ் பெற்றவர் என்பதுடன் நுண்நிதி டிப்ளோமாதாரியும் பயிற்சி மற்றும் மனித வள தேர்ச்சி அபிவிருத்தி தொடர்பான தேசிய டிப்ளோமாதாரியுமாவார்.