011 202 4848

செய்திகள்

“அபே கெதர அவுருது” மேம்பாட்டு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கும் HNB FINANCE

கொவிட் – 19 வைரஸ் காரணமாக முழு நாடும் முற்றாக மூடக்கப்பட்டதனால் 2020 தமிழ், சிங்கள புதுவருடம் வீடுகளில் இருந்தவாரே கொண்டாடிய லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொடுத்த HNB FINANCE “அபே கெதர அவுருது” டிஜிட்டல் புதுவருட மேம்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் இணைந்து பங்குபற்றிய வெற்றியாளர்களை கௌரவிப்பதற்கு நிறுவனம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு பல்வேறு சம்பிரதாய விளையாட்டுக்கள் உள்ளிட்ட நிகழ்சிகளை HNB FINANCE “அபே கெதர அவுருது” டிஜிட்டல் புதுவருட மேம்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE நிறுவனத்தின் இருபது வருடம் பூர்த்தியான ஆண்டில் தமது வாடிக்கையாளர்களுக்கும் மற்றம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் டிஜிட்டல் சேவை கட்டமைப்பின் கீழ் செயற்படுத்தப்பட்ட திறமையான நிதி சேவைகளை பெற்றுக் கொடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்படும் நிறுவனம், இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய டிஜிட்டல் விளையாட்டு அனுபவத்தை இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. “அபே கெதர அவுருது” HNB FINANCE டிஜிட்டல் புதுவருட மேம்பாட்டு நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நாடு முழுவதிலும் உள்ள HNB FINANCE இன் கிளை வலைப்பின்னலின் கிளை முகாமையாளர்களினால் அந்தந்த கிளைகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “உலகம் மிக வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி நகரும் இந்த சந்தர்ப்பத்தில் அதற்கு ஏற்ற விதத்தில் மாற்றமொன்றை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். விசேடமாக கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவத்திற்கமைய டிஜிட்டல் மயத்தைத் தவிர வேறு மாற்று திட்டமொன்று இல்லையென்பதை முழு உலகமும் தெரிந்து வைத்திருந்தது. இதற்காக முன்னெப்போதும் இல்லாத விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நிறுவனம் என்ற ரீதியில் நாம் திருப்தியடைகின்றோம். ஒருபோதும் இல்லாத விதத்தில் நாம் இதற்கு முன் அனுபவித்திராத விதத்தில் புதுவருடத்தை கொண்டாட கிடைத்ததுடன் இது புதிய மாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் எமது சம்பிரதாயங்கள் மற்றும் எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கு நாம் தயாராக இருந்ததாக நான் நினைக்கிறேன். விசேடமாக தமிழ் சிங்கள புதுவருட பெருநாள் என்பது ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எமது விருப்பத்தை தெரியப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். எனினும், கொவிட் தொற்றுநோய் நிலைமையின் போது அந்த அனைத்து சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்டு தனிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலைமையிலிருந்து விடுபட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து எமக்கு பழக்கப்பட்ட புதுவருட விளையாட்டுக்களுடன் இணைந்து கொள்வதற்கு மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க HNB FINANCE ஆன எமக்கு தேவைப்பட்டது.” என தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.