011 202 4848

செய்திகள்

சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிpமை வழங்கி உலக சிறுவர் தினத்தை கொண்டாடியது HNB FINANCE PLC

HNB FINANCE நிறுவனத்தின் ‘யாலு லமா’ சேமிப்பு கணக்கின் அனுசரணையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபா 01ஆம் திகதி சிறுவர்;களின் மனநலத்தை மேம்படுத்தவும் மற்றும் வசதிகள் குறைந்த பாடசாலைகளிலுள்ள சிறுவர் சிறுமியர்;களின் தேவையை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் உலக சிறுவர்; தின கொண்டாட்டத்தை நடத்தியதுடன் இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுநோயை கவனத்தில் கொண்டு சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிpமை பெற்றுக் கொடுக்கும் வகையில் மிகவும் எளிமையாக உலக சிறுவர் தினத்தை கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி HNB FINANCE வவுனியா மற்றும் ஹோமாகம கிளைகளின் பங்களிப்பில் உலக சிறுவர்; தின கொண்டாட்டங்கள் இரண்டு வவுனியா மாரம்பைக் குளம் மற்றும் மீகொடை தாம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளிகள் இரண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்பள்ளி பாடசாலையிலுள்ள சிறுவர், சிறுமிய;ர், பெற்றோர், ஆசிரிpயர்;களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது. சிறுவர்; சிறுமியர்;களின் மனநலத்தை புரிpந்து கொண்டு அவர்;களது திறமைகளை வளர்;த்துக் கொள்வதற்காக இதன்போது பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், விரும்பிய தொனிப் பொருளின் கீழ் சித்திரமொன்றை வரைவதற்கான சந்தர்;ப்பத்தை சிறுவர் சிறுமியர்;களுக்கு பெற்றுக் கொடுத்து இந்த சிறுவர்; தினத்தை உற்சவ ரீதியாக கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

மீகொட தாம்பே காந்தி முன்பள்ளி கிளையில் இடம்பெற்ற உலக சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்விற்கு HNB FINANCE நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஹோமாகம கிளையின் பெண் அதிகாரி கலந்து கொண்டதுடன் காந்தி முன்பள்ளியின் பிரதம ஆசிரியர்; காந்தி ரம்யலதா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறுவர்; சிறுமியர் மற்றும் அவர்;களது பெற்றோர் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளி மற்றும் தனிநபார் சுகாதார விதிமுறைகளை பாதுகாக்கும் வகையில் கலந்து கொண்டனர்;.
இதேவேளை வவுனியாவில் இடம்பெற்ற உலக சிறுவர்; தின கொண்டாட்ட நிகழ்வும் சுகாதார விதிமுறைகளுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் மாரம்பைக் குளம் பகுதியில் அமைந்துள்ள அல் அக்ஷா முன்பள்ளியில் இடம்பெற்றது. அல் அக்ஷா முன்பள்ளி பாடசாலையின் பிரதம ஆசிரியர் இஷான் முனவ்வரா அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றதுடன் இந்த நிகழ்விற்கு முன்பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் பெற்றோர்;களும் கலந்;து கொண்டனர்;. HNB FINANCE நிறுவனத்தின் “யாலு லமா சேமிப்பு கணக்கு” அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு சமாந்திரமாக இந்த முன்பள்ளிகள் இரண்டிலும் கல்வி கற்கும் அனைத்து சிறுவார் சிறுமியர்;களுக்கும் புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான கல்வி உபகரணப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உலக சிறுவர்; தின கொண்டாட்ட நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த HNB FINANCE நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் “பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இருந்த போதிலும் தொடர்ச்சியாக உலக சிறுவர்; தினத்தை கொண்டாட நிறுவனம் எப்போதும் முயற்சிக்க காரணம் நாட்டின் அடுத்த எதிர்காலம் சிறுவர்;கள் என்பதனால் தான். சிறந்த எண்ணம் மற்றும் சிறந்த பண்புகளை எமது குழந்தைகளுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் சிறந்த இலங்கை சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பின் ஒருபகுதி எம்மிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாறான வேலைத் திட்டங்கள் மூலம் அந்த சமூக பொறுப்பை நிறைவேற்ற நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு , தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.