011 202 4848

கண்ணோட்டம்

ஆர்வம் கொண்ட ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும்

HNB FINANCE PLC 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன்  இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி தொழில் சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளது. எமது கம்பனி தேசிய நீண்ட கால தரப்படுத்தல் ‘BBB+ (lka) with a Stable Outlook’ “பிச் ரேடிங்ஸ்” க்கு அமைவாக உறுதிப்படுத்தப்பட்டவாறு அதன் கீழ் நடத்தப்படுகின்றது. எமது நிறுவனம் இலங்கையின் வணிக ரீதியான நுண் நிதியிடலில் முன்னோடி நிறுவனமாக இருப்பதுடன் இலங்கையில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வழிகாட்டியை அறிமுகப்படுத்தி நுண் நிதித் தொழிலுக்கு வழங்கிய பங்களிப்புக்காக சர்வதேச ரீதியாகவும் நிறுவனம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹட்டன் நஷனல் வங்கியின் 650 தன்னியக்க டேலர் இயந்திரங்களுடன் வலுப் பெற்று, நாடு பூராவும் 78 கிளைகள் ஊடாக தனது வணிக நடவடிக்கைகளை பேணுகின்ற  HNB FINANCE, அண்மைய நவீன வணிகத் துறை வரை விரிவடைந்துள்ளதுடன் தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன் (SME),  சேமிப்புகளுக்கு மேலதிகமாக சிறிய அளவிலான கடன் (SSE), தங்கக் கடன், நிலையான வைப்பு வசதிகள் மற்றும் லீசிங் வசதிகளையும் வழங்குகின்றன.

HNB FINANCE நிறுவனமானது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு இடையே முன்னிலைக்கு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற சிறப்புமிக்க சேவை மற்றும் அவர்களுடன் இணைந்து கொண்டு அவர்களுக்கு வழங்குகின்ற நட்பு ரீதியான ஒத்துழைப்பின் காரணத்தால் HNB FINANCE  நிதித் துறையில் மென்மேலும் முன்னோக்கிச் செல்லுகின்றது.

தூரநோக்கு

"அனைவருக்கும் மனிதத் தொடர்பில் புதுமையான தொழில்நுட்ப ரீதியான நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராதல்."


பணி

“வாடிக்கையாளர் மையம் கொண்ட நன்கு பன்முகப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளையும் பொறுப்புணர்வாகவும் பாதுகாப்பாகவும் வழங்கும் அதேவேளை ஆர்வமுள்ள குழு மூலம் மதிப்புள்ள பங்குதாரரை உருவாக்குவதையும் நோக்காக கொண்டுள்ளது.”


InSPIRRE என்ற மதிப்புக்கள்!

நேர்மை
உணர்வு
தொழில் சார்ந்த மனப்பான்மை
கண்டுபிடிப்பு
மரியாதை
சம்பந்தம்
பரிவு