logo
011 202 4848

இயக்குனர்கள் குழு

திறன், அறிவு மற்றும் அனுபவம்

பல வருடகால அறிவு, திறமை, அனுபவம் மற்றும் பொறுப்புள்ள  ஒருங்குடைய எண்ணம் கொண்ட எங்கள் பணிப்பாளர் குழுமத்தின் வழிகாட்டலின்  மூலம் HNB Finance நிறுவனமானது  இலங்கையின் முன்னணி, நிதி நிறுவனமாக  வழிநடத்தப்படுகிறது.

டாக்டர் பிரசாத் சமரசிங்க தலைவர்

டாக்டர் பிரசாத் சமரசிங்க அவர்கள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் HNB FINANCE PLC நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்....

டாக்டர் பிரசாத் சமரசிங்க  | தலைவர்

டாக்டர். பிரசாத் சமரசிங்க அவர்கள் 2026 ஆகஸ்ட் மாதம் HNB FINANCE PLC நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் 2024 பிப்ரவரி மாதம் Hatton National Bank PLC நிறுவனத்தின் பிரதிநிதி பணிப்பாளராக (Nominee Director) HNB FINANCE PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இணைந்தார்.

தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு பொறியியல், இணையப் பாதுகாப்பு (Cybersecurity), டிஜிட்டல் உட்கட்டமைப்பு, நிறுவனத் தகவல் அமைப்புகள் (Enterprise Systems), கூட்டுத்தாபன ஆளுகை, இடர் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக உயர் மட்ட அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். வங்கித்துறை, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும் கூட்டுத்தாபனத் துறைகளில் உயர் நிர்வாக மற்றும் பணிப்பாளர் சபை மட்டத்திலான பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

டாக்டர் சமரசிங்க அவர்கள் கான்பரா, அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (The Australian National University) தொலைத்தொடர்புத் துறையில் Ph.D. பட்டத்தையும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுமாணிப் பட்டத்தையும் (Master of Engineering), மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் முதல் தர கௌரவத்துடன் (First Class Honours) விஞ்ஞான இளங்கலைப் பட்டத்தையும் (B.Sc.) பெற்றுள்ளார்.

மேலும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Certified Information Systems Security Professional (CISSP) மற்றும் Certified Cloud Security Professional (CCSP) தகைமைகளுடன், CPA Australia நிறுவனத்தின் CPA தகைமையையும் பெற்றுள்ளதுடன், CPA Australia நிறுவனத்தின் Distinguished Member ஆகவும் உள்ளார்.

அவர் தற்போது Hatton National Bank PLC மற்றும் Chemanex PLC ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர், Hayleys PLC நிறுவனத்தின் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளராக (Independent Non-Executive Director) பணியாற்றியுள்ளார்.

அத்துடன், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (Insurance Regulatory Commission of Sri Lanka) உறுப்பினர் உள்ளிட்ட முக்கியமான அரச மற்றும் ஒழுங்குமுறைப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

திரு. சமிந்த பிரபாத் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்

தொழில் ரீதியாக நிதியளிப்பவரான திரு. பிரபாத் அவர்கள் ஜேர்மனியின் Frankfurt பாடசாலையினால் உருவாக்கப்பட்ட......

திரு. சமிந்த பிரபாத் | முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்

திரு. பிரபாத் தொழில் ரீதியாக நிதியளிப்பவர் மற்றும் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் பள்ளியில் இருந்து சர்வதேச அளவில் சான்றிதழ் பெற்ற மைக்ரோ ஃபைனான்ஸ் நிபுணர் ஆவார். தனியார் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் (Sp. In Finance). அவர் பட்டய முகாமைத்துவ கணக்காளர்களின் (FCMA, UK & CGMA) சக உறுப்பினராகவும், இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் FICM (SL), மற்றும் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (MCIM) உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் (CMA, AUS) சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளராகவும் உள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வணிகம் மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ளார். அவர் இலங்கையில் நுண் நிதித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் World Consulting Research Corporation (WCRC) வழங்கும் மதிப்புமிக்க “2014 ஆம் ஆண்டின் கேம் சேஞ்சர்” விருதை வென்றவர்.

 

மூத்தவர் திரு. லலித் வித்தான நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்.

திரு லலித் வித்தான 2021 செப்டம்பர் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திரு லலித் 25 வருடங்களுக்கும் மேல...

திரு. ருவன் மனதுங்க | நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்.

திரு லலித் வித்தான 2021 செப்டம்பர் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திரு லலித் 25 வருடங்களுக்கும் மேலாக தாபன பிரிவில் முகாமைத்துவம் சார் பதவிகளை வகித்துள்ளதோடு அக்காலப்பகுதியில் வங்கிகளில் வணிக மற்றும் வியாபார பிரிவுகளில் உயர் முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் Brandix Group, Ernst and Young, Amsterdam Rotterdam (Amro) Bank, IBM World Trade, Corporation and Carson Cumberbatch, Ceylon Tea Services Limited மற்றும் Yamaha Corporation in (USA) போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவராவார்.

திரு லலித் வித்தான சமீப காலம் வரை ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியில் கூட்டு பிரதம நிதி மற்றும் நிர்வாக உத்தியோகத்தராகவும் பின்னர் அதன் இணைய நிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் நிறைவேற்று உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளார். அவர் தற்போது Agility Consulting Services (Pvt.) Ltd தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் Laugfs Gas PLC, Laugfs Maritime Services (Pvt.) Ltd மற்றும் Softlogic Life Insurance PLC இன் பணிப்பாளராகவும் செயற்பட்டு தனது பொறுப்புகளை நிறைவேற்றி தற்போது Acuity Partners (Pvt.) கம்பனியின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் Project Management Institute, Colombo Chapter உப தலைவராகவும் விளங்குகிறார். மேலும் அவர் தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவெற்றுச் சபை உறுப்பினரும் ஆவார்.

அவர் ஏற்கனவே இலங்கை வங்கி, தங்கொட்டுவ பொசிலென் PLC” Merchant Bank of Sri Lanka PLC” Ceylease Limited மற்றும் செலான் வங்கி போன்ற நிறுவனங்களில் சுயாதீனப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு திரு லலித் வித்தான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ^TRCSL&வின் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக பட்டதாரியான திரு லலித் வித்தான, ஐக்கிய இராச்சியத்தின் மன்சஸ்டர் மெட்ரோபொலிற்றன் பல்கலைக்கழகத்தில் கலைமுதுமாணி கௌரவ பட்டதாரியாவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்க முகாமைத்துவ நிறுவனத்தில் கருத்திட்ட முகாமைத்துவ தொழில் வல்லுனருமாவார்.

திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி சுயாதீன நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி நுண் நிதி, நுண் காப்பீடு, நுண் ஓய்வூதியம், செலவினை ஏற்கக் கூடிய / நுண் வீடமைப்பு, வீடமைப்பு நுண்நிதி, குடிநீர் மற்றும் துப்புரவேற்பாடு போன்ற துறை...

திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி |சுயாதீன நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி நுண் நிதி, நுண் காப்பீடு, நுண் ஓய்வூதியம், செலவினை ஏற்கக் கூடிய / நுண் வீடமைப்பு, வீடமைப்பு நுண்நிதி, குடிநீர் மற்றும் துப்புரவேற்பாடு போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த, 15 வருடங்களுக்கும் மேலாக நிறுவனத் துறைசார்ந்த முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் தற்போது இந்தியாவின் S.M.I.L.E Microfinance Limited கம்பெனியில் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அலுவலராகவும் பணியாற்றுகிறார். ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள Protimos Foundation நிறுவனத்தில் பணிப்பாளராகவும், இந்திய பெங்குளுரு நகரின் யூனுஸ் கமூக இயக்க நிதிய முதலீட்டுக் குழு உறுப்பினராகவும் விளங்குகிறார். திரு. முரளி ஏற்கெனவே, இந்தியாவின் Mimoza Enterprises Finance Company Limited கம்பெனி, Signumtree Consultancy Private Limited கம்பெனி, ஐக்கிய இராச்சியத்தின் Hocare Limited கம்பெனி, இந்தியாவின் ஐதராபாத் நகரிலுள்ள Acer Engineers Private Limited கம்பெனி மற்றும் Tripod Impex Private Limited கம்பெனி போன்ற நிறுவனங்களில் நுண் நிதி, தகவல் தொழில்நுட்பம், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், மதியுரைச் சேவைகள் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
திரு. முரளி இந்தியாவின் வெங்கடேசர் பல்கலைக் கழகத்தில் அரசியலில் இளமாணிப் பட்டத்தையும், மதுரைப் பல்கலைக் கழகத்தில் பௌதீகவியலில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், ஹாவர்ட் வணிக கல்லூரியின் நிறைவேற்று கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நுண் நிதிப் பரிவில் தலைமைத்துவம் பற்றிய நிறைவேற்று கற்கை நெறியைப் பூர்த்திசெய்துள்ளார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக் கழக வடிவமைப்புக் கல்லூரியின் அதிதி அங்கத்தவரருமாவார். நிறுவனத் துறைசார்ந்த பணிக்கு மேலதிகமாக ஆரவற்ற பிள்ளைகளின் கல்விக்கான அரசு சாரா அமைப்பான Needy Illiterate Children Education நிறுவனத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தவராகவும், இந்தியாவிலுள்ள வறிய மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசு சாரா அமைப்பான Partners in Prosperity நிறுவனத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தவராகவும் பணியாற்றுகிறார்.

திருமதி ரமனிகா உனம்பூவே சுயாதீன நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

திருமதி ரமனிகா உனம்பூவே, 2025 ஜூன் 4 முதல் HNB Finance PLC-யின் பணிப்பாளர் சபையில் சுயாதீன நிறைவேற்று தரமல்லாத பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்....

திருமதி ரமனிகா உனம்பூவே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்திற்கான பட்டதாரி நிறுவனத்தில் (PIM) மனித வள முகாமைத்துவத்தில் MBA பட்டத்தையும், பிரான்ஸின் பாரிஸில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை (BA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நிரந்தரப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், திருமதி உனம்பூவே Nations Trust வங்கியின் மனித வளப் பிரிவின் நிறைவேற்று உப தலைவராக (Executive Vice President) பணியாற்றினார். Nations Trust வங்கியில் 22 ஆண்டுகள் நீடித்த தனது பணிவாழ்வின் போது, ​​அவர் பெருநிறுவன வங்கிச் சேவை (Corporate Banking) மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில் சிரேஷ்ட மற்றும் பெருநிறுவன முகாமைத்துவப் பதவிகளையும் வகித்துள்ளார்.

Nations Trust வங்கியில் இணைவதற்கு முன்னர், திருமதி ரமனிகா உனம்பூவே கொழும்பில் உள்ள American Express வங்கியில் பெருநிறுவன வங்கிச் சேவைக்கான உறவு முகாமைத்துவ அதிகாரியாகப் (Corporate Banking Relationship Manager) பணியாற்றினார்.

திரு. சிவராஜா நந்தகுமார் சுயாதீனமற்ற, நிர்வாகம் சாராத பணிப்பாளர்

திரு. சிவராஜா நந்தகுமார் அவர்கள், 23 ஜூலை 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீனமற்ற, நிறைவேற்றுப் பொறுப்பற்ற பணிப்பாளராக நியமிக...

திரு. சிவராஜா நந்தகுமார் அவர்கள், இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுநிலை முகாமைத்துவ நிறுவனம் (Postgraduate Institute of Management – PIM) வழங்கும் வணிக நிர்வாக முதுநிலை (MBA) பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் (Institute of Bankers of Sri Lanka – IBSL) வழங்கும் வங்கி மற்றும் நிதித்துறைக்கான Associate Member தகுதியையும் பெற்றுள்ளார்.
தற்போது, திரு. நந்தகுமார் அவர்கள் Hatton National Bank PLC (HNB) நிறுவனத்தின் Executive Vice President / Chief Business Operations Officer (EVP/CBOO) ஆகப் பணியாற்றி வருகிறார். இப்பதவியில், வங்கியின் மத்தியப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் (Centralized Operations), பகிரப்பட்ட சேவைகள் (Shared Services) உள்ளிட்ட அனைத்து வணிகச் செயற்பாடுகளுக்கும் ஒட்டுமொத்த தலைமைத்துவம், மூலோபாய வழிநடத்தல் மற்றும் மேற்பார்வையை வழங்கி வருகிறார்.

அவர், Lanka Financial Services Bureau Limited (LFSBL) நிறுவனத்தின் சுயாதீனமற்ற நிறைவேற்றுப் பொறுப்பற்ற பணிப்பாளராக (Non-Independent Non-Executive Director) பணியாற்றுவதுடன், அந்நிறுவனத்தின் இயக்குநர் சபை கணக்காய்வுக் குழுவின் (Board Audit Committee) செயற்பாட்டு உறுப்பினராகவும் உள்ளார்.

Hatton National Bank PLC நிறுவனத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவைக்காலத்தை கொண்டுள்ள திரு. நந்தகுமார் அவர்கள், கிளை வங்கி சேவைகள், செயற்பாட்டு முகாமைத்துவம், பிராந்திய தலைமைத்துவம், தனியார் வங்கி சேவைகள் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மூத்த நிர்வாக மற்றும் நிறுவனத் தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.
தனது பணிக்காலம் முழுவதும், வங்கியின் வளர்ச்சி, செயற்பாட்டு சிறப்புத் திறன், வாடிக்கையாளர் சேவை விரிவாக்கம் மற்றும் வணிக அபிவிருத்தி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது விரிவான அனுபவம், தலைமைத்துவத் திறன் மற்றும் வங்கி செயற்பாடுகள் குறித்த ஆழமான அறிவு ஆகியவை, வங்கியின் மூலோபாய இலக்குகளை அடைவதிலும் செயற்பாட்டு திறனை மேலும் வலுப்படுத்துவதிலும் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றன

திரு. சுபுன் டயஸ் சுயாதீனமற்ற, நிர்வாகம் சாராத பணிப்பாளர்

திரு. துமுது சுபுன் டயஸ் அவர்கள், 23 ஜூலை 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீனமற்ற, நிறைவேற்றுப் பொறுப்பற்ற பணிப்பாளராக நியமிக...

திரு. சுபுன் டயஸ் அவர்கள், இங்கிலாந்து Chartered Institute of Marketing (CIM) வழங்கும் முதுநிலை சந்தைப்படுத்தல் டிப்ளோமா (Postgraduate Diploma in Marketing) தகுதியைப் பெற்றவர். மேலும், Chartered Institute of Marketing (UK) வழங்கும் Chartered Marketer அங்கீகாரத்தையும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (Sri Lanka Institute of Marketing – SLIM) வழங்கும் Ordinary Life Member உறுப்பினர் தகுதியையும் பெற்றுள்ளார்.
தற்போது, திரு. டயஸ் அவர்கள் Hatton National Bank PLC நிறுவனத்தின் Executive Vice President / Head of Network Business ஆகப் பணியாற்றி வருகிறார். இப்பதவியில், வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் விநியோகச் சேனல்களுக்கு மூலோபாயத் தலைமையையும், ஒட்டுமொத்த வழிநடத்தலையும் வழங்கி வருகிறார்.
Hatton National Bank PLC நிறுவனத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவைக்காலத்தை கொண்டுள்ள அவர், சந்தைப்படுத்தல் மற்றும் வலையமைப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல மூத்த மற்றும் நிறுவன நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். தனது அனுபவமும் தலைமைத்துவமும் மூலம், வங்கியின் வளர்ச்சிக்கும் அதன் சேவை விரிவாக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

திரு. ரெனுகே விஜயவர்தனே சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

திரு. ரெனுகே விஜயவர்தனே அவர்கள் 2026 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக...

திரு. ரெனுகே விஜயவர்தனே அவர்களின் சுயவிவரம்

திரு. ரெனுகே விஜயவர்தனே அவர்கள் சட்டத்தரணி (Attorney-at-Law) ஆவதுடன், பத்திரச் சந்தை ஒழுங்குமுறை, கூட்டுத்தாபன ஆளுகை, மேற்பார்வை மற்றும் இணக்கப்பாடு, மூலதனச் சந்தை உட்கட்டமைப்பு மற்றும் நிதிச் சந்தைத் தயாரிப்புகள் ஆகிய துறைகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட சிறப்புமிக்க மூலதனச் சந்தை நிபுணர் ஆவார்.

2025 ஜூலை மாதத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் (CSE) பிரதம ஒழுங்குமுறை அதிகாரி (Chief Regulatory Officer) பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதன் மூலம் CSE நிறுவனத்தில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்புமிக்க தொழில்வாழ்க்கை நிறைவடைந்தது.

CSE இல் பணியாற்றிய காலப்பகுதியில், திரு. விஜயவர்தனே அவர்கள் பரிவர்த்தனை நிலையத்தின் ஒழுங்குமுறைச் செயற்பாடுகளுக்கு மூலோபாயத் தலைமைத்துவத்தை வழங்கியதுடன், ஒழுங்குமுறைக் கொள்கை, பட்டியலிடல், பங்குத் தரகர் மேற்பார்வை, வர்த்தகச் செயற்பாடுகள், சந்தைக் கண்காணிப்பு மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இணக்கப்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.

இலங்கையின் மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் நம்பகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் கொள்கை கட்டமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார். மேலும், ஒழுங்குமுறை அமைப்புகள், பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள், பங்குத் தரகர்கள், முதலீட்டு வங்கிகள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடனான தொடர்புகளுக்கும் அவர் தலைமைத்துவம் வழங்கினார்.

சந்தை மேம்பாட்டுக்கான பல முக்கிய முயற்சிகளிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவற்றில் CSE இல் பல புதிய மூலதனச் சந்தைத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், புதிய பட்டியலிடல் கட்டமைப்புகள் மற்றும் வாரியங்களை (Boards) அறிமுகப்படுத்துதல், அத்துடன் Delivery versus Payment (DvP), Central Counter Party Clearing (CCP) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் போன்ற முக்கியமான சந்தை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் கொள்கை கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில், அவர் Central Depository System (CDS) நிறுவனத்திற்குத் தலைமை தாங்கியதுடன், CSE இன் வர்த்தகத்திற்குப் பிந்தைய உட்கட்டமைப்பு மற்றும் தீர்வுமுறை (settlement systems) மேலும் வலுப்படுத்தப்படுவதற்கு பங்களித்தார்.

CSE இலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், திரு. விஜயவர்தனே அவர்கள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்திற்கும், பங்களாதேஷின் டாக்கா பங்குப் பரிவர்த்தனை நிலையத்திற்கும் ஆலோசகராகப் பணியாற்றினார்.

தற்போது, அவர் மூலதனச் சந்தைச் செயற்பாடுகள், மூலதனம் திரட்டுதல், நிறுவன மறுசீரமைப்பு, ஒழுங்குமுறை மற்றும் சட்ட இணக்கப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும் கூட்டுத்தாபன ஆளுகை உள்ளிட்ட துறைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் மற்றும் பங்குத் தரகு நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் கலந்தாலோசனைச் சேவைகளை வழங்கி வருகிறார்.

திரு. விஜயவர்தனே அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் (LL.B. Hons.) சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். மூலதனச் சந்தை ஒழுங்குமுறை, பத்திரங்கள் மற்றும் கூட்டுத்தாபனச் சட்டம், கூட்டுத்தாபன ஆளுகை, இணக்கப்பாடு, சந்தைச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை அமுலாக்கம் ஆகிய துறைகளில் அவருடைய நிபுணத்துவம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூலதனச் சந்தைச் செயற்பாடுகள், சந்தை ஒழுங்குமுறை, பத்திரச் சட்டம் மற்றும் கூட்டுத்தாபன ஆளுகை தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் மன்றங்களில் மதிப்புமிக்க பேச்சாளராகவும் வளவாளராகவும் (Resource Person) அவர் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

திருமதி சாந்தி ஞானபிரகாசம் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

திருமதி சாந்தி ஞானபிரகாசம் அவர்கள் 2026 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாள...

திருமதி சாந்தி ஞானபிரகாசம் அவர்களின் சுயவிவரம்

திருமதி சாந்தி ஞானபிரகாசம் அவர்கள் Cargills Bank PLC, Wealth Trust PLC மற்றும் Vision Fund Lanka (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக (Independent Non-Executive Director) பணியாற்றி வருகிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான வங்கித் துறை அனுபவத்தைக் கொண்டுள்ள சாந்தி அவர்கள், கருவூல முகாமைத்துவம் (Treasury Management), இடர் முகாமைத்துவம் (Risk Management), கடன், மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் (Centralized Operations) மற்றும் வர்த்தக நிதி (Trade Finance) ஆகிய துறைகளில் பல்வேறு மூத்த நிறுவனத் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

NDB Bank PLC நிறுவனத்தில் அவர் Chief Group Risk Officer, Vice President – Shared Services மற்றும் Chief Credit Officer ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் HNB நிறுவனத்தில், Chief Risk Officer மற்றும் Head of Treasury & Markets ஆகிய பதவிகளை வகித்ததுடன், கருவூல முகாமைத்துவம் மற்றும் Fixed Income, Foreign Exchange (FX) மற்றும் Derivatives ஆகியவற்றில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

தனது தொழில்வாழ்க்கையில், Hayleys PLC நிறுவனத்தின் Group Treasurer, People’s Bank இன் Deputy Head of Treasury மற்றும் American Express Bank Ltd Sri Lanka நிறுவனத்தின் Director – Treasury & Country Head of Global Markets ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவரது தொழில்முறை அனுபவத்தில் Treasury Systems மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல், IFRS போன்ற கணக்கியல் தரநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன. மேலும், கடன், இடர் முகாமைத்துவம், கருவூலத்துடன் தொடர்புடைய தொழில்நுட்பப் பாடங்கள், கணக்கியல், தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் (Mentorship) ஆகிய துறைகளில் வங்கியாளர்கள், கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்குப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.

அவரது உயர் கல்வித் தகுதிகளில் Madras பல்கலைக்கழகத்தில் விலங்கியல் (Zoology) துறையில் முதல் தரத்துடன் (First Class) பெற்ற BSc பட்டம் அடங்குகிறது. அத்துடன், UK-இன் Chartered Institute of Management Accountants (CIMA) நிறுவனத்தின் Fellowship மற்றும் Chartered Global Management Accountant (CGMA) தகுதிகளையும் பெற்றுள்ளார்.

மேலும், ACI Financial Markets Association, Paris நிறுவனத்திடமிருந்து Dealer Certification தகுதியையும் சாந்தி அவர்கள் பெற்றுள்ளார்.

திருமதி நபீஹா மொஹமட் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

திருமதி நபீஹா மொஹமட் அவர்கள் 2026 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நி...

திருமதி நபீஹா மொஹமட் அவர்களின் சுயவிவரம்

திருமதி நபீஹா மொஹமட் அவர்கள் கார்ப்பரேட் நிதி, முதலீடு மற்றும் மூலோபாயத் துறைகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவத்தைக் கொண்டவர். இலங்கை, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பெற்றுள்ள அவரது தொழில்முறை அனுபவம் கார்ப்பரேட் மூலோபாயம், நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் (Mergers & Acquisitions), பரிவர்த்தனை ஆலோசனை (Transaction Advisory), தனியார் பங்கு முதலீடு (Private Equity) மற்றும் ரியல் எஸ்டேட் அபிவிருத்தி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

தற்போது, திருமதி நபீஹா அவர்கள் Lynear Wealth Management நிறுவனத்தில் Strategy and Growth பிரிவின் தலைவராக (Head of Strategy and Growth) பணியாற்றி வருகிறார்.

Lynear நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், இலங்கை நிதி அமைச்சின் கீழ் இயங்கிய State-Owned Enterprise Restructuring Unit இல் Lead Transaction Advisor ஆகப் பணியாற்றினார். அப்பதவியில், விருந்தோம்பல், காப்புறுதி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளில், மொத்தமாக USD 600 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட ஐந்து முன்னுரிமை நிறுவனப் பங்குவிலகல் (Divestiture) பரிவர்த்தனைகளுக்கு அவர் தலைமைத்துவம் வழங்கினார்.

இதற்கு முன்னர், CHEC Port City Colombo மற்றும் John Keells Holdings ஆகிய நிறுவனங்களில் மூலோபாயம் மற்றும் கார்ப்பரேட் நிதி தொடர்பான பதவிகளில் பணியாற்றியதுடன், பல்வேறு முக்கியமான மூலோபாய மற்றும் முதலீட்டு முயற்சிகளிலும் பங்களித்துள்ளார்.

திருமதி நபீஹா அவர்கள் CFA Charterholder தகுதியைப் பெற்றுள்ளதுடன், University of Toronto பல்கலைக்கழகத்தில் Economics மற்றும் Biochemistry ஆகிய இரு துறைகளிலும் இரட்டைச் சிறப்புப் பாடப்பிரிவுடன் (Double Major) Honours Bachelor of Science பட்டம் பெற்றுள்ளார்.

அவர் CFA Society Sri Lanka நிறுவனத்தின் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அதன் Candidate Council இன் தலைவராக (Chairperson) பணியாற்றி வருகிறார்.

டாக்டர் திசுரி வன்னியாராச்சி சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

டாக்டர் திசுரி வன்னியாராச்சி அவர்கள் 2026 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், HNB Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்ப...

டாக்டர் திசுரி வன்னியாராச்சி அவர்களின் சுயவிவரம்

டாக்டர் திசுரி வன்னியாராச்சி அவர்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அபிவிருத்தி நிதியியல், அரச முதலீட்டு செயற்பாடுகள், கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தம், சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

தற்போது, இலங்கையில் செயல்படுத்தப்படும் முக்கியமான பல்தரப்பு சமூகப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் முதலீட்டு நிதியளிப்பு திட்டம் ஒன்றின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளராக (National Programme Coordinator) பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்னர், உலக வங்கியில் (World Bank) தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா, கிழக்காசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்திலும், குறிப்பாக பொருளாதார சீர்திருத்த அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் தேசிய சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் டாக்டர் வன்னியாராச்சி அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அஸ்வெசும (Aswesuma) திட்டம் மற்றும் அதன் சமூகப் பதிவேடு (Social Registry) ஆகியவற்றை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் முன்னணி பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கைத் துறையில் (Public Policy) PhD பட்டம் பெற்றுள்ளார். மேலும், அமெரிக்காவின் Bennington College மற்றும் ஜப்பானின் Kansai Gaidai University ஆகிய நிறுவனங்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் (Political Economy) BA பட்டம் பெற்றுள்ளார்.

அத்துடன், தேசிய அளவில் பரவலாகப் பாராட்டப்பட்ட பல நூல்களின் ஆசிரியராகவும் டாக்டர் திசுரி வன்னியாராச்சி அவர்கள் திகழ்கிறார்.