011 202 4848

வலைப்பதிவு

வியாபார கடன் ஒன்றைப் பெறுவதற்குரிய எட்டு காரணங்கள்

வியாபாரக் கடனொன்றைப் பெறுவதற்குரிய எட்டு காரணங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் சிறிய ஒரு சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க உத்தேசித்துள்ள நபராக இருக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் வியாபாரத்தை விரிவாக்க எண்ணியுள்ள அனுபவம் வாய்ந்த வர்த்தகராக இருக்கலாம். எப்படிப்பட்டவராக இருந்தாலும் வியாபாரக் கடனொன்றை அல்லது வங்கிக் கடனொன்றைப் பெறுவதுதான் உங்கள் வியாபாரத்திற்கு பணத்தை முதலீடுசெய்வதற்கு உள்ள எளிதான வழி. வியாபாரக் கடனொன்றைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான காரணங்களுக்காகவே நீங்கள் அந்தக் கடனை பெற வேண்டும்.

வியாபாரக் கடனொன்றைப் பெறுவதற்குரிய எட்டு காரணங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

1. வியாபாரத்தை தொடங்குதல்

உங்களுக்கு தொழில்முயற்சி என்ற கனவை நனவாக்க வேண்டிய தேவை இருந்தாலும் அதற்குத் தேவையான பணம் இல்லாததுதான் முக்கியமாக பிரச்சினை. உங்களுக்கு வலுவான வியாபார திட்டமும், அதனை சாதகமாக்கிக் கொள்ளும் திறமையும் நம்பிக்கையும் இருந்தால் வியாபார கடனொன்றைப் பெறத் தயங்கத் தேவையில்லை.

புதிதாக வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்கவும், ஏற்கனவே கொண்டு நடத்தும் வியாபாரத்தை விரிவாக்கவும் எண்ணியுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி ஒத்துழைப்பினை வழங்கும் மிக எளிதான வியாபாரக் கடன் வசதியை HNB FINANCE கம்பனி தற்போது வழங்குகிறது.

2. புதிய பணியாளர்களை சேர்த்தல்

தற்சமயத்தில் உங்களுடைய தொழில்நுட்பக் குழு, உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களையும் கனிஷ்ட ஊழியர்களையும் கொண்டிருக்கலாம். உங்களுடைய கம்பனியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய சிரேஷ்ட அபிவிருத்தியாளர்கள் சிலரை சேர்த்துக்கொள்வதற்கான காலம் கைகூடி உள்ளதாக நீங்கள் உணரலாம். இதுபோன்ற தேர்ந்த மூத்தவர்களை குறைந்த சம்பளத்திற்கு சேர்க்க முடியாதது துரதிஷ்டம்தான். இருந்தபோதிலும், அவர்களை சேர்த்துக்கொண்டால் உங்கள் கம்பனியின் உழைக்கும் திறனை கவனம் பெறத்தக்க வகையில் அதிகரித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டு.

இந்த நிலையில், உங்களுடைய வியாபாரத்தின் வீச்சினை அதிகரித்துக்கொள்ள மிகவும் கைதேர்ந்த ஊழியர்களைச் சேர்க்கக்க்கூடிய வகையில் உங்களுடைய வியாபாரத்தின் தேவைக்கு ஏற்றதாக பணத்தை முதலீடு செய்ய கடன் ஒன்றைப் பெறுவது சாதுரியமான ஒரு காரியமா இருக்கும்.

3. வியாபாரத்தை விரிவுபடுத்தல்

உங்கள் வியாபாரத்தை புதியதொரு திசையில் நகர்த்தி, அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு இது உகந்த காலமாக இருக்கலாம். சில சமயங்களில் பெரிய சந்தையை நோக்கி நகர, புதிய உற்பத்திகளை சேர்த்துக்கொள்ள அல்லது இரண்டாவது சந்தைப்படுத்தல் நிலையத்தைத் திறந்து வைக்கும் தேவையும் இருக்கலாம். இந்த அனைத்து கருமங்களுக்கு போதுமான பணம் தேவைப்படுவதால் உங்கள் பணத்தேவையை நாடுவதற்கான மிகவும் லோசான வழி வியாபார கடனொன்றை பெறுவதுதான்.

எமது வாடிக்கையாளர்கள் வியாபாரக் கடனைப் பெற பல வழிகள் உள்ளன. உதாரணமாக, அடகுக் கடன், உத்தரவாதிகளை முன்னிறுத்தி கடன் தொகையொன்றை கோருவதற்கு அல்லது வைத்திருக்கும் பணத்தின் உதவியுடன் (சேமிப்பு வைப்பு) ஒரு கடனைப் பெறலாம். இவை அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளைத் தரலாம். சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு HNB FINANCE கம்பனி வழங்கும் வியாபார கடனானது தமது வியாபாரத்தை வரிவுபடுத்திக்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

4. சந்தைப்படுத்தல் நுணுக்கங்களை விரிவுபடுத்தல்

உங்களுடைய வியாபாரம் அதன் இலக்குகளை நோக்கி நகர்வதற்கு மேலதிகமான ஓர் உந்தலின் அவசியத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தனியே வாடிக்கையாளரின் திருப்தியாலும் பரப்பப்படும் வதந்திகளாலும் முன்னேற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பில் உங்களது சேவையின் தரத்தை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொள்வதற்கு கவனம் செலுத்துவது போதுமானதாக இருக்காது. சமகாலத்தில் பொதுமக்களை சென்றடைவதை விரிவுபடுத்தும் இலக்குடன் சந்தைப்படுத்தல் நுட்பங்கள. உத்திகளால் வியாபாரத்தை முன்னேற்ற முடியும். உங்கள் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை நீங்கள் வைத்திருக்கக் கூடும். உங்களுக்கு பரந்த நோக்கு (Brand Visibility) இருக்க வேண்டும்.

இதற்கான தீர்வு வலுவான சந்தைப்படுத்தலும் மேம்பாடும் என்பதை நீங்கள் அறிந்தாலும் கூட, துரதிஷ்டவசமாக அது மிகுதியான செலவைத் தரலாம். வியாபாரக் கடன் ஒன்றைப் பெறுவதால் சந்தைப்படுத்தல் நுணுக்கங்களை மேம்படுத்தி, உங்களுடைய வியாபாரத்தை விரிவாக்குவதற்கும், உரிய காலத்தில் கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதற்கும் போதுமான லாபத்தைச் சம்பாதித்து உரிய இலக்கை அடைவதும் சாத்தியமாகும்.

5. பொருட்களின் கையிருப்பை அதிகரித்தல்

நீங்கள் காலாகாலத்திற்கு தேவையான பொருள் விற்பனை நிலையம் ஒன்றைக் கொண்டு நடத்தினால் தற்போதுள்ள கையிருப்புக்காக செய்துள்ள முதலீட்டில் லாபத்தைக் காணும் முன்பே அடுத்தப் பருவ காலத்திற்கு தேவையான கையிருப்புக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டியநிலை நிறையவே உருவாகலாம். எனவே, உங்களிடமிருந்த எல்லாப் பணத்தையும் கையிருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக செலவுசெய்துவிட்டல் கையிருப்பில் உள்ள பொருட்கள் விற்பனையாகும் வரை கூடுதல் உதவி தேவைப்படலாம். கடன் பெறுவதால் இந்தப் பருவத்தில் கையிருப்பில் உள்ள பொருட்கள் விற்பனையாகும் வரை உங்களுடைய பணிகளைத் தொடரவும், அடுத்தப் பருவத்திற்கு தேவையான கையிருப்புடன் தயார் நிலையில் இருப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

6. உங்கள் வணிகத்தை வேறு இடத்திற்கு மாற்றுதல்.

உங்களுடைய வியாபாரத்தை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய காலம் கைகூடி வரலாம். அதேபோல், மிகவும் செழிப்பான ஒரு சூழலுக்குள் அதைக் கொண்டு செல்வது வியாபாரத்தின் அமைப்புக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்கள் கருதலாம். அதை செயல்படுத்தும்போது அதற்கான வாடகை உயர்ந்து போக்குவரத்து, பொதி செய்தல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துவது போன்ற செலவுகளுக்கு பணம் அவசியமாகும். இத்தருணத்தில் வியாபார கடன் பெறுவது உங்கள் பணிகளை எளிதாக்கும்.

7. புதிய வணிக சூழலை மறுசீரமைத்தல்

உங்களுடைய அலுவலக வளாகத்திற்கு எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொள்வதில் மிக முக்கிய பங்கு உண்டு. அந்தச் சூழல் உங்களுடைய வியாபாரம் பற்றிய பல செய்திகளை தந்துவிடும். ஆகவே, அதன் தோற்றமும் அது தரும் உணர்வின் ஈர்ப்பையும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல், மெச்சும் படியான வேலைகளச் சூழல் ஊழியர்களின் வினைத்திறனை உயர்த்த உதவி, வியாபாரத்தின் முன்னேற்றத்திலும் பங்கு வகிக்கும். மகிழ்ச்சியாக இருக்கின்ற உழியர்கள் எப்போதும் உங்கள் வாடிக்கையாளர், நிறுவனத்தைப் பற்றி கவனத்துடன் இருப்பர்.

இது மிகவும் அவசியம். உங்கள் வணிகத்தின் வேலைக்களத்தை தொடர்ச்சியாக விருத்தி செய்வதற்கு நிதி அவசியம் என்பதால் HNB FINANCE வழங்கும் வியாபார கடன் உங்கள் கனவை விரைவாகவும் வசதியாகவும் நனவாக்குவதற்கு நல்லதொரு தீர்வாக இருக்கும்.

8. வணிகத்தின் நுணுக்கமான விடயங்களை விருத்தி செய்தல்

தொழில்நுட்பம் உங்கள் வணிகத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறக்கூடும். புதிய தொழில்நுட்பத்தை வசப்படுத்திக் கொள்வதற்கான முதலீடுகள் உங்களுடைய வியாபாரம் அதிகப்படியான வெற்றிகளை குவிப்பதற்கும் காலத்தால் பிந்திய தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாட்டினால் ஏற்படுகின்ற இழப்புகளை குறைக்கவும் உதவும்.

இது நீங்கள் கடன் பெறுவதில் மிக முக்கிய காரணமாகவும், இறுதியில் வியாபாரத்தினால் நீங்கள் அடையும் பலனை கண்கூடாகக் காணவும் வழி செய்யும். HNB FINANCE கம்பனி வழங்கும் வியாபார கடன் வசதி, தொழில் முயற்சியாளர்களும் வியாபாரிகளும் சிரமம் இல்லாமல் துரிதமாக வியாபார கடன்பெற்று வியாபாரத்தை முன்னேற்றுவதற்கும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

HNB FINANCE கம்பனியிலிருந்து கவர்ச்சிகரமான வட்டியுடனும் ஐந்து வருட மீளச் செலுத்தும் காலத்துடனும் 20 மில்லியன் ரூபா வரையான கடன் வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இது உங்களின் வியாபாரக் கனவை நனவாக்குவதற்கு நிச்சயமாக கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுடைய எல்லாத் தேவைகளுக்குமான அதிகபட்ச கடன் தொகையை குறைந்த வட்டியுடன் பெற்று, நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள கிளை வலையமைப்பின் நம்பிக்கை, நட்புறவு, துரித வணிக கடன்கள் சேவையையின் திருப்தியை HNB FINANCE கம்பனியுடன் சேர்ந்து அனுபவியுங்கள்.