011 202 4848

வலைப்பதிவு

தனிப்பட்ட கடன் என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டி

தனிநபர் கடன் வசதி  என்பது பல விடயங்களுக்குத் தேவையான நிதியளிப்பில் சிறந்த, பயனுள்ள வசதியாகும். அவசர மருத்துவ செலவுகளுக்காக அல்லது விலையுயர்ந்த கொள்முதல் அல்லது கல்விக்காக என பல வகையான தனிப்பட்ட கடன்கள் இன்று கிடைக்கின்றன. இருப்பினும், இந்த வகையான கடன்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய அறியாமை உங்களுக்கு இலாபத்தை விட அதிகமாக செலவை ஏற்படுத்தக் கூடும். அதற்காக உங்களுக்கு உதவும் பொருட்டு, தனிப்பட்ட கடன்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றியும் அவற்றை உங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியுமான முழுமையான வழிகாட்டி இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட கடன் என்பதன் பொருள்கோடல்

ஒரு தனிப்பட்ட கடன் என்பது இலகுவாக (பொதுவாக 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலப் பகுதிக்குள்) சில ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தக் கூடியவாறு நிதியைக் கடனாகப் பெறல் எனப் பொருள்கோடல் செய்யலாம்.  இந்த நிதியை மீளவும் செலுத்துதல் மாதாந்த தவணைக் கொடுப்பனவு முறையில் மேற்கொள்ளப்படுவதுடன் வட்டியும் அதனோடு செலுத்தப்படும். கடன் வழங்குபவர் மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடலாம்.

தனிப்பட்ட கடனின் அடிப்படை அம்சங்கள்

தனிப்பட்ட கடனுக்கு பொதுவாக 5 அடிப்படை அம்சங்கள் உள்ளன, ஆனாலும் இது கடன் வழங்குநரைப் பொறுத்ததாக இருக்கும்.

வட்டி விகிதம்

கடன் வட்டி விகிதங்கள் என்பது மொத்த கடன் தொகையின் சதவீதமாக அறவிடப்படுகின்றது.பணத்தை கடன் வாங்குவதற்கான செலவு என பொருள்கோடல் செய்யப்படுகின்றது. கடன் தொகை, கடன் காலப் பகுதி மற்றும் உங்கள் கடன் மதிப்பெண் ஆகியவற்றைப் பொறுத்து, கடன் காலம் முடிவடையும் வரை ஒவ்வொரு மாதமும் கடன் வழங்குபவருக்கு இதனைச் செலுத்துதல் வேண்டும்.

கடன் காலப் பகுதி

கடன் காலப் பகுதி என்பது நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலப் பகுதி என்பதாகும் உதாரணமாக, HNB FINANCE கம்பனி மூலம் வழங்கப்படுகின்ற ரிலாக்ஸ் தனிநபர் கடனின் கடன் காலப் பகுதி ஆகக் கூடியது 5 ஆண்டுகள் ஆகும்.

கட்டணங்கள்

இது கடன் தொகையை ஒழுங்குபடுத்துவதற்காக மேற்கொள்ளுகின்ற செலவாகும். இந்தக் கட்டணங்கள். தொடர்புடைய நிதி நிறுவனம் தனிப்பட்ட கடனை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றது என்பதைப் பொறுத்ததாக இருக்கும். இதில் ஆவணக் கட்டணம், சட்டத்தரணிக்குரிய கட்டணம், சேவை கட்டணம் என பல கட்டணங்கள் இருக்கலாம்.

ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல்

கடன் தொகையின் இடர் நிலைமையை குறைந்தபட்சமாக பேணுவதை உறுதி செய்யும் பொருட்டு, கடன் தொகையை கோருகின்ற விண்ணப்பப் படிவத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் சம்பளம், கடன் மதிப்பெண் மற்றும் உத்தரவாதச் சொத்துக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஏனைய அம்சங்கள்

தண்டப் பணம், மேலதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடனைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தரவாதச் சொத்துக்களின் திட்டவட்டமான விடயங்கள் போன்றவைகள் ஒரு வங்கி  அல்லது ஒரு நிதி நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற கடன் தொடர்பில் பல அடிப்படை அம்சங்கள் உள்ளன. நீங்கள் கடன் தொகையைப் பெறும் நிதி நிறுவனத்தைப் பொறுத்து இந்த விடயங்கள் மாறுபடலாம்.

தனிப்பட்ட கடன் எவ்வாறு செயற்படுகிறது

தனிப்பட்ட கடன் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிமையான விடயமாகும். உதாரணமாக, HNB FINANCE நிறுவனத்தின் ரிலாக்ஸ் கடன் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்..

இலங்கை ரூபா 75,000 தொடக்கம் இலங்கை ரூபா 3,000,000 வரை பரந்துபட்ட கடன் தொகை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுவதற்கான தேவை உங்களுக்கு ஏற்படின் அதனை பிணையாளர்கள் அல்லது 2 அடகு ஆதனங்களைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். அசையாச் சொத்துக்களை அடகு வைப்பதன் மூலம் 12,000,000 ரூபா வரை கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடன் தொகை பொதுவாக வட்டி உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் ஆற்றலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது 1-5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

கடன் தொகை உறுதி செய்யப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் அதற்குரிய காலப் பகுதி முடிவடையும் வரை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த முடியாது போகுமிடத்து மீதியாக உள்ள தொகையின் அடிப்படையில் தண்டப் பணத்தையும் மற்றும் மேலதிக வட்டித் தொகையையும் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

தனிப்பட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளும் தேவைப்பாடுகள்

எமது ரிலாக்ஸ் தனிப்பட்ட கடன் தொகையைப் போன்று இலகு கடன் தொகை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுவதற்காக பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய சில தேவைப்பாடுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

வயது – 24 -50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுகின்றனர்.

கடன் மதிப்பெண் –  ஆளொருவர் இலங்கை கடன் தரப்படுத்தல் தகவல் பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருப்திகரமான கடன் மதிப்பெண் அளவினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

வருமானத்தை உறுதிப்படுத்துதல் – ஆளாருவருக்கு வழங்கப்படும் காலப் பகுதிக்குள் கடன் தொகையை திருப்பிச் செலுத்தக் கூடிய ஆற்றல் இருத்தல் வேண்டும். ஆதலால் போதுமான அளவு வருமான மூலங்கள் இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதான ஆவணங்கள் குறித்த நபர் சமர்ப்பித்தல் வேண்டும்.

சொத்து உத்தரவாதம் – கடன் தொகையின் அளவின் அடிப்படையில் சொத்து உத்தரவாதமாக இரண்டு பிணையாளர்கள்அல்லது அடகு ஆதனங்கள் தேவைப்படும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இடரைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு இந்தத் தேவைப்பாடுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

தற்பொழுது நீங்கள் உங்களது வாழ்வினை மிகவும் இலகுவானதும் வசதியானதுமாக மாற்றிக் கொண்டு ரிலாக்ஸ் தனிப்பட்ட கடன் போன்ற கடனைப் பெற்றுக் கொள்ள அதன் முழு அளவு வரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த விளக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.