011 202 4848

வலைப்பதிவு

உங்கள் கனவு வீட்டைக் கொள்வனவு செய்து கொள்ளுவது தொடர்பான 5 கட்டங்கள்

நீங்களும் உங்கள் கனவு இல்லத்தின் உரிமையாளராக விரும்புகிறீர்களா?  காணி ஒன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது வீடு ஒன்றை ஆரம்பத்தில் இருந்தே நிருமாணித்தல் அல்லது நிருமாணிக்கப்பட்டுள்ள வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து அதனை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுவது எமது அனைவரினதும் சிந்தனையாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே வீட்டுக்கு சொந்தக்காரராக இருக்க முடியும் இருந்தாலும் உங்கள் குடும்பம் வளரும் போது அந்த வீட்டை பெரிதாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

கட்டம் 1:  உங்கள் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் எதனைத் தேடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும். வீட்டின் வகை, நீங்கள் வாழ விரும்பும் பகுதி, நீங்கள் அண்மித்து இருக்க வேண்டிய வசதிகள் போன்றவை அனைத்தும் உங்கள் கனவு வீட்டைப் பற்றி சிந்திக்கும்போது கவனிக்க வேண்டியவைகளாகும். உங்கள் தேவைகளை நீங்கள் அறிந்திருக்கும்போது உங்கள் தேடலைக் குறைப்பது எளிது. இதன் பின்னர் விற்பனை பணிகள் எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு விற்பனையாளருடன் தொடர்பு கொள்ளும் பணி மாத்திரமே மிகுதியாக இருக்கும்.

கட்டம் 2:  உங்கள் கடன் நிலைமையைக் கண்டறியவும்

நீங்கள் எந்தவொரு கடனுக்கும் விண்ணப்பிக்க விரும்பினாலும், நல்ல கடன் மதிப்பீட்டைக் கொண்டிருப்பது அவசியம். எனவே, உங்கள் கடன் மதிப்பீட்டை அறிந்து, அது சரியான மட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய கடைசி விடயம், நீங்கள் வாங்க விரும்பும் வீட்டைக் கண்டுபிடிப்பது, விற்பனையாளர்களுடன் பேசுவது, பின்னர்  உங்கள் கடன் தரப்படுத்தல் மூலம் நீங்கள் அனுமதிக்கப்படுகின்றீர்களா என்பதை ஆராய்ந்து பார்ப்பதாகும். இதற்கு அமைவாக அது சரியான மட்டத்தில் காணப்படாத பட்சத்தில் கடன் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை அதனை சரியான மட்டத்துக்கு கொண்டு வருவதாகும். இது பொதுவாக உங்களது கடன் தொகையில் ஒரு தொகையை செலுத்தி முடிப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும்.

கட்டம் 3: எங்களுடன் தொடர்பு கொள்ளவும்

எளிதான கடன் விண்ணப்ப செயல்முறை மூலம் உங்கள் கனவுகளை நனவாக்குவதாக HNB FINANCE பீ எல் சீ உறுதியளிக்கிறது. வீட்டுக் கடன்கள் தொடர்பாக உங்களிடம் காணப்படுகின்ற ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் பதிலளிக்க எங்கள் ஊழியர்கள் தயாராக உள்ளனர்.(உங்கள் கடன் தரப்படுத்தல் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு) நீங்கள் தகுதி பெற்ற கடனின் மதிப்பு மட்டுமன்றி கடனை மீளச் செலுத்துதல் மற்றும் வட்டித் தொகை பற்றி புரிந்து கொள்ளுங்கள். நன்கு ஆயத்தமாகிக் கொண்டு எங்களைச் சந்தித்து சட்டத் தரப்புடன் கடன் விண்ணப்பத்திற்குத் தேவையான சட்ட ஆவணங்கள் எவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கட்டம் 4: வைப்புத் தொகையை செலுத்துங்கள்

கடன் நடவடிக்கை தொடர்பில் நீங்கள் உள்ள இடத்தைப் பொறுத்து, வீட்டுக் கடனின் ஒரு பகுதியாக உங்கள் புதிய வீட்டின் விலையில் 50-80% வரையிலான அளவினைப் பெற்றுக் கொள்ளுவதற்கு உங்களுக்கு உரித்து உண்டு. மீதமுள்ள 20% ஐ நீங்கள் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எனவே, ஆரம்ப வைப்புத்தொகையை மேற்கொள்ளும் பொருட்டு உங்கள் பணச் சேமிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திட்டமிடல் இந்த நடவடிக்கைக்கு தேவையான முக்கிய காரணியாகும். வரவு செலவு விடயத்தை யாரும் விரும்புவதில்லை, ஆனால் வீடு வாங்குவது போன்ற பெரிய வாழ்வாதார முடிவுகளை எடுக்கும் போது இது மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே உங்கள் கனவுகளுக்கு தேவையான அர்ப்பணிப்புகளைச் செய்யுங்கள்.

கட்டம் 5:  கடனுக்கு விண்ணப்பிக்கவும்

நீங்கள் வைப்புத் தொகையை செலுத்தியிருந்தால், உங்கள் கடன் மதிப்பீட்டு அளவை மேம்படுத்த சட்ட மற்றும் தொழில்நுட்ப தரப்புக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால், இப்போது செய்ய வேண்டியது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்த பணியை எளிமையாகவும் எளிதாகவும் செய்ய, எந்தவொரு இடையூறையும் ஏற்படாத வண்ணம் உங்களது வீட்டுக்கு சமூகமளித்து குறித்த ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் சேவையையும் நாங்கள் வழங்குவோம்.

இன்றே எங்களுடன் தொடர்பு கொண்டு நிவஹன வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் உங்களது கனவை நனவாக்கிக் கொள்ளும் திசையை நோக்கி அடியொன்றை எடுத்து வைக்கவும்.