011 202 4848

ஓய்வுக் காலத்தை திட்டமிட மிகச் சிறந்த வழிகாட்டல்

ஓய்வு பெறுதல் என்பது நீங்கள் செய்த தொழிலில் இருந்து விலகி, நீங்கள் சிரமப்பட்டு சம்பாதித்த உழைப்பின் பலனை அனுபவிக்கின்ற காலமென்பதால் பலரும் அதனை தங்கள் வாழ்வின் பொன்னான காலமெனக் கருதுகின்றனர். எனினும், எதிர்காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியான ஓய்வுக் காலத்தை கழிக்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு ஓய்வூதியத் திட்டம் இருக்க வேண்டும்
எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தல், குறிப்பாக அது நிதித் திட்டம் பற்றிய சிந்தனையாக இருந்தால், அது உங்களுக்கு தயக்கத்தை கொண்டு வரலாம். ஓய்வுக் காலத்தை திட்டமிடுதல் தொடர்பாக HNB பினான்ஸ் வழிகாட்டல் மூலம் உங்கள் ஓய்வுக் காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்ள உத்தரவாதம் அளிக்கிறது.

ஓய்வூதிய திட்டமொன்று இருப்பதன் நன்மைகள்

இன்று தொடக்கம் உங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதே ஓய்வூதியத் திட்டமொன்று இருப்பதன் பாரிய நன்மையாகும். ஓய்வுக் காலத்தை திட்டமிடுதல் பாரதூரமான ஒன்றாக தென்படுகின்ற போதும், நினைப்பதை விடவும் அது மிகவும் எளிதானது. பிரதானமாக நீங்கள் வேலை செய்தீர்கள், சேமித்தீர்கள் அதேபோல இறுதியில் ஓய்வு பெறுகிறீர்கள். பல வருட காலமாக இதுதான் நடந்தது. நீண்ட ஆயுள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை அடைவதற்கு / முடங்குவதற்கு காரணமான, முன்னொருபோதும் இல்லாத வகையில் முழு உலகமும் பெருந்தொற்றை எதிர்நோக்கியுள்ளது. ஓய்வுக் காலத்திற்காக சேமிப்பதன் நன்மைகள் பின்வருமாறு,
• உங்களுக்கு உங்கள் முதலீடுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்: நீங்கள் ஓய்வு பெற்ற பின் உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்காததால் மேலதிகமான வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரே வழி முதலீடே. ஓய்வூதியத் திட்டத்திற்கான முதலீட்டை மேற்கொள்வதற்கும் ஒரு தொகை பணத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
• ஓய்வுக்கு முன்கூட்டிய முடிவுகளை எடுப்பது இலகுவானது: சில நேரங்களில் உங்களுக்கு, பிற்காலத்தில் தொழில் ரீதியான பட்டப்படிப்பை அல்லது தகைமைகளை நிறைவு செய்யும் தேவை காணப்படலாம். நீங்கள் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கும்போது உங்களின் வசதியான எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படாது. உதாரணமாக ஓய்வு பெறுவதற்கு மேலும் 15 வருட காலம் இருக்கின்ற ஒரு நபருடன் ஒப்பிடுகையில், நீங்கள் ஓய்வில் செல்ல மேலும் 05 வருடங்கள் காணப்படுமானால், உங்களுக்கு அந்த வரப்பிரசாதம் கிடைக்காமல் போகலாம்.
• நீங்கள் எதற்கும் தயாரான ஒருவராக மாறுவீர்கள்: சில நேரங்களில் உங்களுடைய ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு எதிர்பாராத செலவை ஏற்படலாம். அது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கான உதவியாக அல்லது வேறு தேவையாக இருக்கலாம். உங்களுடைய நிதி பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் அந்த தேவையை பூர்த்தி செய்யலாம்.

உங்கள் சேமிப்பை எந்த காலத்தில் தொடங்க வேண்டும்?

உங்கள் ஓய்வுக் காலத்திற்கான சேமிப்பை எந்த காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்கு எந்தவொரு உத்தரவும் கிடையாது. இருப்பினும் முடிந்தவரையில் விரைவாக தொடங்குவது மிகவும் பொருத்தமானது. சேமிப்பு ஒன்றை தொடங்குவதற்கு எக்காலமும் உகந்ததாக இருப்பினும், திட்டமிட்டதைவிட கால தாமதம் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சேமிக்கத் தொடங்கினால், மாதம் ஒன்றில் உங்கள் சேமிப்பு ரூபா 500 ஆக இருப்பினும் பல வருடகாலம் உங்கள் பணம் சேமிக்கப்பட்டு சேமிப்பு தொகையில் அதிகரிப்பு உறுதி செய்யப்படும். உங்களுடைய சேமிப்புக் கணக்கில் மாதாந்தம் சேமிக்கும் தொகையையும் அதிகரிக்க முடிவதுடன், அது மேலும் நன்மையாக அமையும். இதேபோல், 20 வயதிலும் 30 வயதுலும் சேமிக்கத் தொடங்கலாம். எனினும், நீங்கள் அதிக காலம் சேமிக்கும்போது உங்களுடைய சேமிப்பிலிருந்து கூடுதலான தொகையை ஓய்வு காலத்திற்காக சேமிக்க முடியும்.

எவ்வாறு சேமிப்பை தொடங்க வேண்டும்?

நீங்கள் இரண்டு விதமாக உங்கள் ஓய்வுக் காலத்திற்கான பணத்தைச் சேமிக்கலாம். சேமிப்பு கணக்கு ஒன்றில் பணத்தை சேமித்தல் அல்லது நிலையான வைப்பு மூலமான சேமிப்பு. இந்த இரண்டு வழிமுறைகளிலும் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் உள்ளன. எனினும் நீண்டகால நிலையான வைப்பு அனுகூலமாது.
சாதாரணமாக எதிர்காலத்தின் பொருட்டு பணத்தைச் சேமிக்கும் எவரும் முதலாவதாக சேமிப்புக் கணக்கையே தொடங்குவர். உங்களுடைய நிதி இலக்கு ஓய்வு பெறுவதற்கான சேமிப்பு எனின் அது மிகவும் சிறந்தது. HNB பினான்ஸ் நிறுவனத்தில் மூவகை சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அதாவது சாதாரண சேமிப்பு கணக்கு, குறிப்பாக பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட மியுலெசி கணக்கு மற்றும் சிறுவர்களுக்கான யாலு சேமிப்புக் கணக்கு.

எவ்வாறு சேமிப்பை தொடங்க வேண்டும்?

கணக்கொன்றை ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மைகள் சில பின்வருமாறு,
• குறைந்தளவான ஆரம்பத் தொகை மற்றும் பேணல் தேவைகள் – கணக்கைப் பேணி வருவதற்கான குறைந்தபட்ச மீதி ரூபா 250 ஆகும்.
• இலகுவான அணுக்கம் – நாடெங்கிலும் உள்ள எங்களுடைய கிளை வலையமைப்புகள் ஊடாக எளிதாக பணத்தை சேமிக்கவும், மீளப் பெற்றுக் கொள்ளவும் அதேபோல் வேறு கணக்கு ஒன்றுக்கு மாற்றவும் முடியும். மேலும் நீங்கள் HNB பினான்ஸ் ATM அட்டை மூலம் 24 மணி நேரமும் கணக்கினை அணுகலாம்.
• சேமிப்பு கணக்கின் வட்டி சேர்க்கப்படும். HNB பினான்ஸ் ஆகிய நாம் நாளாந்த மீதி மீதான வட்டியைக் கணித்து மாதாந்தம் வரவு வைப்பதால் அதி கூடிய வட்டி வீதத்தை வழங்கி வருகிறோம்.
நிலையான வைப்பு என்பது, ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். எளிமையாக கூறின், குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னர் நிரந்தரமான அனுகூலங்கள் உறுதி செய்யப்படும் நிதி முதலீடு நிலையான வைப்பாகும். முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் வட்டியுடன் இந்த அனுகூலம் கிடைக்கின்றது. நிலையான வைப்புக் கணக்கிற்கு சாதாரண சேமிப்பு கணக்கை விட அதிகமான வட்டி கிடைப்பதால் இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு மாற்றீடாகும்.

நிலையான சேமிப்பின் மூலம் கிடைக்கும் சில அனுகூலங்கள் பின்வருமாறு,

• அதி கூடிய வட்டி வீதம் அதிக நன்மைகளைப் பெற்று தரும். நிலையான வைப்புகளுக்கு போட்டிகர வட்டி வீதம் கிடைப்பது மட்டுமல்லாது, HNB பினான்ஸ் கம்பனி நிலையான வைப்புகளுக்கு மிகச்சிறந்த வட்டி வீதத்தை வழங்குவதோடு அதனை மாதாந்தம், வருடாந்தம் அல்லது முதிர்ச்சியின் போது பெற்றுக் கொள்ள முடியும். அதுமாத்திரமன்றி, சிரேஷ்ட பிரஜைகளின் முதலீடுகளுக்கு 0.5% மேலதிக வட்டி உண்டு.
• உங்களுக்கு நிலையான வட்டி வீதத்திற்கான உத்தரவாதம் கிடைப்பதால் நிலையான வைப்புகள் மூலம் திருப்தியற்ற நன்மைகளை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவானது. உங்களது வைப்புக் காலம் முடியும் வரை உங்களுடைய உழைப்பு பங்குச் சந்தை போன்ற வெளிச் சக்திகளின் தாக்கத்திற்கு உட்படாது.
• உங்கள் வைப்புகள் அதாவது நிலையான அல்லது சாதாரண சேமிப்பு ஆகிய இரு வகை சேமிப்பும், வைப்பாளர் ஒருவருக்கு ரூபா 1,000,000 வரையான தொகைக்கு இலஙகை வைப்புக் காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும். HNB பினான்ஸ் கம்பனிக்கு பிட்ச் ரேட்டிங் (Ftch Ratings) நிறுவனத்தினால் “A (lka)” நீண்டகால சேமிப்பு தரப்படுத்தலை வழங்கப்பட்டுள்ளதால் ( 2021 செப்டம்பர் மாதம் அளவில் HNB பினான்ஸ் கம்பனியில் மேற்கொள்ளும் நிலையான வைப்புகள் பாதுகாப்பானவை ஆகும்.
• வைப்பாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபா தொடக்க மீதியைக் கொண்டு HNB பினான்ஸ் கம்பனியில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முடியும்.
இறுதியாக உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும், உங்கள் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்துகொள்ள அந்த முடிவை கூடியளவு விரைவாக நடைமுறைப் படுத்துங்கள். அதன்மூலம் உங்களுடைய பொன்னான காலத்தை இனிதே கழிக்கலாம். ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினால் இன்றே எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.