011 202 4848

வலைப்பதிவு

பொருத்தமான கடன் திட்டத்தால் முன்னேற்றம் காணுங்கள்

வரையறைகளும் விதிகளும் கொடுக்கல்-வாங்கலுக்கு மேலும் தடையாக அமையாது, தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மென்மேலும் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இவ்வுலகில், ஒருவர் உலகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு காரணிகளை ஆராயும்போது நிறைவேற்றுவதற்கு சற்று கடினமான வகையில் மனிதனின் தேவைகள் அதிகரித்துள்ளன. எவ்வாறாயினும், ஒருவர் இத்தேவைகளை எந்தச் சுமையும் இன்றி நிறைவேற்றக்கூடிய வகையில் சேவைகளை வழங்குவதன் மூலம் சிரமங்களைப் போக்க HNB FINANCE கம்பனி முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் நாம், உங்கள் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வழங்கும் 05 வகையான கடன் திட்டங்கள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

தங்கக் கடன்

எந்த ஒரு தேவைக்கும் இலகுவில் பணத்தை பெற்றுக்கொள்ள மிகவும் வசதியான ‘தங்கக் கடன்’ திட்டத்தின் மூலம் உங்களுடைய தங்க ஆபரணங்கள் பிணையாக வைக்கப்பட்டு மிக விரைவில் பணம் வழங்கப்படும். நாம் வழங்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதம், உங்களுடைய தங்க ஆபரணங்களுக்கு வழங்கப்படுகின்ற காப்புறுதி அதேபோல் திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு வருட காலம் வரை வழங்கப்படுகின்ற தளர்வான மீளச் செலுத்தல் காலம் போன்ற அம்சங்களால் HNB FINANCE கம்பனியின் இந்த கடன் திட்டம் சிறப்பு பெறுகிறது. அதுமாத்திரமன்றி இச்சேவையை பெறுபவர்கள் பெறுமதியான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் உண்டு.

இந்த சேவை சிறந்த தொழில்வாண்மை கொண்டது. HNB FINANCE கம்பனி உங்களுடைய தங்க ஆபரணங்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் ஏற்படாததை உறுதி செய்யும் பொருட்டு நவீன சாதனங்களை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற, தங்க ஆபரணக் கைத்தொழிலில் அனுபவம் வாய்ந்த அதேபோல் சிறந்த பயிற்சி பெற்ற தங்க ஆபரண மதிப்பீட்டாளர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.

உங்களுடைய தங்க ஆபரணங்களை மீட்டுக் கொள்வது கடன் பெறுவதைப் போலவே இலகுவானது. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களுக்காக கடன்களைப் பெற்றிருந்தால், நெகிழ்வுத் தன்மையுடன் எந்தகைய முன்னறிவிப்பும் இன்றி ஒவ்வோர் ஆபரணமாக மீட்டுக்கொள்ள HNB FINANCE கம்பனி உங்களுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதேபோல் சந்தையில் தங்கத்தின் பெறுமதி அதிகரித்தால் அதற்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் தொகையை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்.

வீட்டுக் கடன்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான அதேபோல் சிறு வயது தொடக்கம் மனங்களில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ள இல்லக் கனவவானு சமகாலத்தில் குடும்பம் மற்றும் தொழிலுக்காக செய்யும் அர்ப்பணிப்பு காரணமாக எட்டாக்கனியாக இருக்கலாம். HNB FINANCE கம்பனி அதன் விசேட கடன் திட்டமான ‘நிவாஹன’ திட்டத்தின் மூலம் உங்களுக்கு எளிமையான தீர்வை வழங்குவதோடு, உங்கள் கனவு இல்லத்தை குறைவான தாமதத்தில் அமைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்தக் கடன் வசதி குறைவான நிபந்தனைகள் மற்றும் தளர்வான மீளச் செலுத்தல் காலத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் இந்தக் கடன் தொகையை வினைத்திறனாக பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் உங்கள் கனவு இல்லம் அமைக்கப்படும்போது கட்டம் கட்டமாக பணம் வழங்கப்படும். அதுமாத்திரமன்றி, HNB FINANCE கம்பனி உங்களை நாடி வந்து சேவை வழங்குவதாலும் உங்களுடைய இல்லம் ஏனையவற்றிலும் தனித்துவமாக விளங்குவதற்குத் தேவையான வழிகாட்டல் வழங்கப்படுவதாலும் உங்கள் விருப்பத்திற்கு அமைய இல்லத்தை அமைக்கலாம்.

கல்விக் கடன்

நிறுவன ரீதியில் உச்சத்தை தொடும் நோக்குடன் உங்கள் கல்வியை மேலும் தொடர விரும்புகிறீர்களா? இல்லாவிட்டால் ஆய்வு மற்றும் வெளியீட்டு துறை சார்ந்த உங்கள் நிபுணத்துவத்தை விருத்தி செய்ய விரும்புகிறீர்களா? இதுபோன்ற கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக தொகை தேவைப்படுவதோடு, அது இன்றும் எதிர்பார்ப்புடன் தமக்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் கடினமானது.

HNB FINANCE கம்பனி கவர்ச்சிகரமான வட்டி விகிதம் அதேபோல் தளர்வான மீளச் செலுத்தல் காலத்துடன் வழங்கும் “நனசர” கடன் திட்டம் உங்களின் கல்வி கனவு நிறைவேற வழி செய்கிறது. இத்திட்டத்தின் கிழ் HNB FINANCE கம்பனி பாடநெறிக் கட்டணத்தில் 90 சதவீதத் தொகையை வழங்குகின்றமை உயர்கல்வி வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைவதோடு, இதன் மூலம் ரூபா 50,000 தொடக்கம் 3,000,000 வரையான தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் விரும்பிய துறையில் வாண்மை பெறும் உங்கள் ஆசையை “நனரச” கடன் திட்டம் உங்களுக்கு நெருக்கமாக்கியுள்ளது.

வியாபாரக் கடன்

பலருக்கும் அவர்களுடைய உன்னதமான வியாபார நோக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச தளத்திற்கு கொண்டுசெல்லும் தொழில் முயற்சியின் மையமாக இலங்கை துரிதமாக மாறி வருகிறது. நாட்டிலுள்ளவர்களின் மனங்களில் பல்வேறு எதிர்பார்ப்புகளும் அபிலாசைகளையும் இருந்தாலும் கூட பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய திட்டங்களை சாதகமாக்கிக் கொள்வது கடினமே. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய தடைகளை தகர்த்தெறிய HNB FINANCE கம்பனி தளர்வான சில வியாபாரக் கடன்களை வழங்குகிறது.

உங்கள் தேவைப்படி, HNB FINANCE கம்பனியின் ஈசி லோன் திட்டத்தில் உங்களுடைய நடவடிக்கையை தொடங்குவதற்கான தொடக்க மூலதனத்தை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், அபிலாச கடன் திட்டத்தில் தொழில் முயற்சியாளர்கள் பாரிய தொகையை கடனாகப் பெற்றுக்கொள்ளமுடியும். நீங்கள் ஒரு சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் உத்தரவாதிகள் இன்றி சுயகச்தி கடன் திட்டத்தின் மூலம் ரூபா 400,000 வரையான தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல், சவிய கடன் திட்டத்தின் மூலம் உங்களுடைய வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும் விரிவுப்படுத்துவதற்கு தேவையான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் HNB FINANCE கம்பனியுடன் இணைந்து கொள்வதன் மூலம் உங்களுடைய வியாபாரத்தின் துரித வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

தனிநபர்க் கடன்

நீங்கள் வெளிநாடு செல்ல அல்லது வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்பின் HNB FINANCE கம்பனி உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 05 வருட தளர்வான மீளச் செலுத்தல் காலத்துடன் கூடிய தனிநபர்க் கடன் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் அசையாத சொத்தினை பிணையாக வைத்துக்கொண்டு ரூபா 12,000,000 வரையான கடன் தொகையை அல்லது இரண்டு நபர்களை பிணையாக முன்னிலைப்படுத்தி ரூபா 3,000,000 வரையான தொகையை கடனாகப் பெறலாம். HNB FINANCE கம்பனி உங்களை நாடி வந்து சேவையினை வழங்குவதால், வாடிக்கையாளர்கள் எந்தவிதமான தொந்தரவும் இன்றி துரிதகதியில் கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும் HNB FINANCE கம்பனி, முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்விலும் உங்களுக்கு பக்கபலமாக நின்று, குறைவான சிரமத்தையும் கூடுதலான நன்மையையும் செய்து உங்களின் சகல தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும்.