011 202 4848

வலைப்பதிவு

நிலையான வைப்புகள் : அவை எவ்வாறு செயற்படுகின்றன மற்றும் அவற்றின் நன்மைகள்

தற்பொழுது உங்கள் சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுவதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு அதிக வருமானத்தை அளிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. நிலையான வைப்புத் தொகை அத்தகைய பிரபலமான முதலீடாகும்.

நீங்கள் அனுபவிக்கக்கூடிய நன்மைகளில் ஒன்று HNB FINANCE நிறுவனத்தின் நிலையான வைப்பு வசதியை இலங்கையின் பிற நிதி நிறுவனங்களின் நிலையான வைப்புடன் ஒப்பிடும்போது அதிக நன்மையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஏனைய பிரதான நன்மைகளைப் அறிந்து கொள்வதற்கு முன், ஒரு நிலையான வைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நிலையான வைப்பு எவ்வாறு செயற்படுகிறது?

எளிமையாகக் குறிப்பிடுவதாயின், நிலையான வைப்பு என்பது (சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிதி நிறுவனம் முன்கூட்டியே இணங்கியது போன்று).ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி கடந்ததன் பின்னர் ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்யும் முதலீடுகள் ஆகும். இந்த வருமானம் வட்டியுடன் சேர்ந்து முதலீட்டு காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ஒரு நிலையான வைப்பு என்பது வருவாயின் உத்தரவாதத்தின் காரணமாக அதிக வருவாயைப் பெறுவதற்கான பாதுகாப்பான முதலீடாகும்.

நிலையான வைப்பு ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் கிடைப்பதன் நன்மைகள்

நிலையான வைப்பை முதலீடு செய்ய HNB FINANCE நிறுவனத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அதன் ஊடாக பல நன்மைகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் சில முக்கிய நன்மைகள் கீழே காட்டப்படுகின்றன.

அதி கூடிய வட்டி விகிதங்கள்

இயற்கையாகவே ஒரு நிலையான வைப்பு என்பது உங்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கும் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு கருவியாகும். இருப்பினும், HNB FINANCE நிறுவனத்தின் வட்டி விகிதங்கள் நாட்டின் சிறந்த வட்டி விகிதங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன, இது மாதாந்த, வருடாந்த அல்லது முதிர்வு அடிப்படையில் கிடைக்கிறது. மேலும், நீங்கள் ஒரு சிரேஷ்ட பிரஜையாக இருந்தால் நீங்கள்  உங்களது முதலீட்டில் மேலதிகமாக 0.5% வட்டிக்கும் தகுதியுடையவராகின்றீர்கள் சுருக்கமாகக் கூறுவதாயின், உண்மையிலேயே  உங்கள் வருமானம் இலங்கையில் உள்ள வேறு எந்த நிதி நிறுவனத்தையும் விட அதிகமாகவே இருக்கும்.

காப்புறுதி

உரிய நபர் (முதலீட்டாளர்) தனது வருவாயைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிலையான வைப்பு அதற்கான காப்புறுதியுடன் வழங்கப்படுகிறது. உங்கள் வைப்புத் தொகையானது வைப்பில் இடும் ஒருவரை இலங்கை ரூ. 600,000 வரை இலங்கை வைப்புப் காப்புறுதித் திட்டத்தின் மூலம் காப்புறுதி செய்யப்படுகின்றது. மேலும், HNB FINANCE நிறுவனம் என்பது பிட்ச் ரேடிங் என்னும் தரப்படுத்தல் நிறுவனத்தால் வழங்கப்படும் ‘AA- (lka)’  ஒரு தேசிய நீண்டகால தரப்படுத்தல் சான்றிதழைக் கொண்ட நிறுவனமாகும். இந்த சான்றிதழ் நிலையான வைப்புகளின் பாதுகாப்பைக் குறிக்கிறது.

குறைந்த எச்சரிக்கை

நிலையான வைப்புகளின் பாதுகாப்பான தன்மை காரணமாக, உங்கள் வைப்புக் காலம் முடிவடையும் வரை  நிலையான வைப்புத் தொகைக்கு காப்புறுதி உத்தரவாதம் மற்றும் ஒரு நிலையான வட்டி விகிதம் ஒன்றை வழங்குவதற்கான உத்தரவாதத்துடன் செயற்படுவதால்  உங்கள் வருவாயில் பங்குச் சந்தை போன்ற வெளிப்புற சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாது.  சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின், ஒரு நிலையான வைப்புத் தொகையின் நன்மை தொடர்பில் துரதிஷ்ட நிலை ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு.

சேமிப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது

நீங்கள் அதை உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும்,நிலையான வைப்பானது நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை சேமிப்பதற்கு ஒரு நிலையான ஊக்குவிப்புப் படியாக செயற்படுகிறது. தற்போதுள்ள பணப்புழக்கம் மற்றும் குறைந்த ஆபத்து காரணமாக, ஒரு நிலையான வைப்பானது இறுதி கடன் வழங்குநராகவும் செயற்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு குறிப்பிடத்தக்க தொகை ஒன்றை வழங்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் முதிர்ச்சிக்கு முன்னர் உங்கள் நிலையான வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம். நிச்சயமாக, உங்களுக்குத் தண்டப்பணம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் இது ஒரு மிகக்குறைந்த தொகையாகத்தான் இருக்கும். சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின், இது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.

நெகிழ்வான காலத் தேர்வு முறை

நிலையான வைப்புகள் உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப நெகிழ்வான ‘காலப் பகுதிக்குள் ‘ மேற்கொள்ள முடியும். இது 12 முதல் 60 மாதங்கள் வரையிலான காலப் பகுதியாக இருந்தாலும் உங்களுக்கு உங்கள் வருவாயை எந்த நேரத்திலும் திரும்பப் பெற நீங்கள் HNB FINANCE மூலம் உங்களது நிலையான வைப்புத் தொகைக்கான காலப் பகுதியை தெரிவு செய்ய முடியும். மற்ற முதலீட்டு மாற்றுவழிகளைப் போலன்றி, நிலையான வைப்புகளில் முதலீட்டுக் காலம் நெகிழ்வானதாகும்.

வைப்புத் தொகையை பிணையாக வைத்து கடன் பெறுதல்

உங்களின் வைப்புத் தொகையை பிணையாக வைப்பதன் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்பை HNB FINANCE நிறுவனம் வழங்குகின்றமை நிறுவனத்தின் தனித்துவமான ஒரு சேவையாகக் கருதப்படுகின்றது. வைப்புத் தொகையில் 90% வரையிலான கடன் தொகையை குறைந்த வட்டி விகிதத்தின் கீழ் பெற முடியும்.

சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின், குறிப்பாக HNB FINANCE நிறுவனத்தில் திறக்கப்படுகின்ற ஒரு நிலையான வைப்புக் கணக்கின் மூலம் அதிக வருவாய் உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் எந்தவொரு பெரிய ஆபத்தும் இல்லாமல் பயனுள்ள கடன் வசதிகளைப் பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.