011 202 4848

வலைப்பதிவு

உங்கள் பிள்ளைக்கு மிகவும் பொருத்தமான சிறுவர் சேமிப்புக் கணக்கைத் தெரிவு செய்யவும்

ஒரு பொறுப்பான பெற்றோராக, எதிர்காலத்திற்காக உங்கள் பிள்ளைக்கு ஒரு நிலையான நிதிச் சூழலை உருவாக்குவது உங்கள் பொறுப்பாகும். இருப்பினும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய செலவுகள் காரணமாக அந்த பணி கடினமாக இருக்கும். உங்கள் பிள்ளையின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏதேனும் ஆதரவு இருந்தால், அது எப்போதும் வரவேற்கத்தக்கது, மேலும் யாலு- சிறுவர் சேமிப்புதிட்டம் உங்கள் குழந்தைக்கு நிலையான நிதி உதவியை உறுதிப்படுத்த உதவும் ஒரு விரிவான தீர்வினை. HNB FINANCE நிறுவனம் உங்களுக்கு வழங்கும்.

கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்

இந்தக் கணக்கின் ஊடாக கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மூலம் வருமானத்தை ஈட்டும். உங்கள் குழந்தையின் பாடசாலை பயணத்தின் ஆரம்ப நிலையில் உள்ள உங்களது பிள்ளைக்காக பணத்தை மீதப்படுத்தி பிள்ளையின் எதிர்காலத்திற்கான பணத்தை சேமிக்கும் பழக்கத்தை இப்போது இருந்தே உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தலாம். இத்தகைய நிதி திரட்டல் உங்கள் குழந்தையின் நிதி தேவைகளை பிள்ளை 28 வயதை அடையும் போது அது மிகவும் உதவியாக இருக்கும். இதனால் பெற்றோர்கள் மீதான நிதிச் சுமையையும் குறைக்கும்.

உயர்கல்விக்கு ஊக்குவிப்புத் தொகை

ஒரு சிறந்த வாழ்க்கையை அடைந்து கொள்ளுவதற்கு சிறந்த கல்வி அறிவைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம். போட்டி நிறைந்த உலகில், ‘யலு சிறுவர் சேமிப்புக் கணக்கு’  மூலம் உங்கள் பிள்ளை தான் படிக்க விரும்பும் துறையைத்  தீர்மானிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. உங்கள் பிள்ளை ஆரம்பக் கல்வி கற்கும் போதே எங்கள் நிறுவனத்தில் இந்தக் கணக்கை ஆரம்பிப்பதன் மூலம், உயர்கல்வியைத் தொடர போதுமான நிதி சேகரிக்கப்படுவதுடன், அவர்களின் உயர் கல்விக்கு HNB FINANCE நிறுவனத்தின் பிற நிதி சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள். கிடைக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கணக்கின் நெகிழ்வுத்தன்மை குழந்தையின் மூன்றாம் நிலைக் கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையாக இருக்கும்.

இந்தப் பணிகளை இலகுவாக மேற்கொள்ளல்

எங்களுடன் இணைந்து ஒரு சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கும் போது உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் உள்ள நன்மைகள் பல உண்டு. ஆவணங்களை இலகுவில் ஒழுங்குபடுத்தி பின்னர் பின்பற்றக்கூடிய எளிய நடைமுறைகளின் நீங்கள் செய்ய வேண்டியது, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் உங்கள் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் உங்கள் தேசிய அடையாள அட்டை போன்ற தகவல்களை உறுதிப்படுத்துதலுக்கான தேவையான ஆவணங்களை எங்களுக்குத் தருவதுதான். மீளாய்வு செய்யப்பட்டதன் பிறகு, ஒரு கணக்குப் புத்தகம் பெற்றோருக்கு வழங்கப்படும், மேலும் உங்கள் பிள்ளை இந்த நிதியை சுயாதீனமாக பயன்படுத்தும் பொருட்டு பிள்ளை 18 வயதை அடையும் வரையும் பண வைப்புச் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் இற்றைவரைப்படுத்தப்படும்.

பிள்ளைகளுக்கான பாதுகாப்பு வலையமைப்பு

எங்கள் நிறுவனத்தில் சிறுவர் சேமிப்புக் கணக்கை பராமரிப்பதன் நன்மைகளில் ஒன்று பாதுகாப்பை உறுதி செய்வதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் பிள்ளையின் சேமிப்பு ஆபத்து இல்லாமல் அதிகரிப்பதாகும். வைப்பு நிதி நாளாந்தம் அதிகரிப்பதன் மூலம் உங்கள் பிள்ளைக்குத் தேவையான காலப் பகுதியில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தை அளிக்கும் பாதுகாப்பு வலையமைப்பை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் உங்கள் பிள்ளை உரிய நிதியைப் பயன்படுத்த போதுமான வயதாக இருக்கும்போது இது ஒரு இறுதி மாற்றீடாகவும் செயற்படும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து நன்மைகளுடனும் ஒரு ‘யாலு – சிறுவர் சேமிப்பு’ கணக்கை ஆரம்பிப்பது உங்கள் பிள்ளைக்கு நீண்ட காலத்திற்கு ஒரு சீரான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும். நாங்கள் வழங்கும் பல எதிர்கால நன்மைகளுடன், இந்த சேவையானது உங்கள் பிள்ளைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சரியான வாய்ப்பாகவும் இது அமையும்.