011 202 4848

சுளகு உற்பத்தி போன்ற பாரம்பரிய தொழில்கள் இதுவரையும் பாதுகாக்கப்படுகிறது என்றால் HNBFINANCE கம்பனி எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு தான் காரணம்.

கண்டியின் ஹந்தெஸ்ஸ, கிராமத்து மண் வாசனையோடு பின்னிப்பிணைந்து வாழ்க்கை நடத்தும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட ஒரு கிராமம்….. அந்தக் கிராமத்தில் பல்வேறு பாரம்பரிய தொழில்களை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு பஞ்சமில்லை… அவ்வாறு பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வசந்தா குமாரி…..

இன்று வீட்டின் சமையல் கட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி வரும் சுளகு, வசந்தா போன்றவர்களின் வாழ்க்கைக்கு இன்றும் பொருளாதார பலம் சேர்க்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது…. இது வசந்தா குமாரியின் கதை….

நான் திருமணம் முடித்து என்னுடைய கணவரின் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள். எங்கள் குடும்பம் பாரம்பரியமாக சுளகு உற்பத்தி தொழிலை செய்து வருகிறது. திருமணம் முடித்து வந்த பின்னர் நானும் அந்தத் தொழிலில் இணைந்து கொண்டேன். இன்று நானும் அந்த தொழிலைதான் செய்கிறேன்…. சுளகு பின்னத் தேவையான மூங்கில் போன்ற மூலப்பொருட்களை கொண்டுவர சற்று தொலை தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கும் வாகன கூலி செலுத்துவதற்கும் அதே போல கை உதவிக்கு வருபவர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் ஒரு ஆரம்பத் தொகை தேவைப்படுகிறது. நாங்கள் இவ்வாறு கொண்டு வரும் மூங்கிலைப் பிளந்து கீலங்களாக வெயிலில் உலர்த்தி பதப்படுத்த வேண்டும். இந்த ஆரம்ப வேலைகள் முடிந்த பின்னர் சுலோக பின்ன தொடங்குவோம்…… சுற்றி மூங்கில் பட்டை கட்டுவது என்பது பெண்களால் முடியாத காரியம் அதற்கு ஆண்கள் தேவை. இப்படி ஒரு சுளகை பின்னி முடிப்பதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் அவசியம்…. அந்த குறிப்பிட்ட காலத்தில் எங்களால் சுமார் இருபது அல்லது இருபத்தைந்து சுளகுகளை பின்ன முடியும்.

சுளகு உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருட்களை கொள்வனவு செய்யவும் கூலியாட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. நாங்கள் சுமார் பதினான்கு வருடங்களாக எங்களுடைய உற்பத்திக்குத் தேவையான கடனை HNBFINANCE கம்பனியிலிருந்து பெற்று வருகிறோம்…. எங்களுடைய தேவைக்கு ஏற்ற வகையில் துரிதமாக தேவையான கடன் தொகையை HNBFINANCE கம்பனி அன்றும்-இன்றும் வழங்கி உதவிக் கரம் நீட்டி வருகிறது. அவ்வாறு கடன் பெற்று உற்பத்தி செய்யும் சுளகுகளை விற்பனை செய்வதற்கு தூர இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஹிங்குரக்கொட, பொலனறுவை அதேபோல் அம்பாரை போன்ற தூர பிரதேசங்களுக்கு செல்லவேண்டும்…. கொழும்பு போன்ற நகரப் பிரதேசங்களில் சுளகு பாவனை அருகி வருவதும் அதற்கு ஒரு காரணம். அப்படியிருந்தும் நாங்கள் இந்த தொழிலை செய்து வருகிறோம்.

வசந்தா சொல்வதைப் போல சுளகு உற்பத்திக்கு நாட்டில் உள்ள சந்தை நிலவரங்கள் சற்று நிச்சயமற்றதாகவே உள்ளன… ஆனால் அவர்கள் பாரம்பரியத் தொழிலை கைவிடுவதாக இல்லை…. இந்த நிலையிலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அவர்கள் தங்களுடைய உற்பத்திகளை முன்னெடுப்பதற்கும் தேவையான நிதி உதவி அதேபோல அறிவு விருத்திக்கும் HNBFINANCE கம்பனி இன்றும் நாளையும் பக்கபலமாக இருக்கும்.

வசந்தா குமாரி
ஹந்தெஸ்ஸ
கண்டி.