011 202 4848

HNB FINANCE எம்மைப் பற்றி சிந்திக்கின்றது

அரட ஆடை (பாரம்பரிய கண்டிய ஆடை) உற்பத்தி கண்டிக்கே உரித்தான கைத்தொழில் என்றால் மிகையாகாது. தற்போது கரை நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் அரட ஆடைகள் தயாரிக்கப்பட்டாலும் கூட அந்த ஆடையை தயாரிப்பதற்கான துணி இன்றும் கண்டியில் அந்த தொழிலை மேற்கொள்பவர்களிடமே உள்ளது. கண்டி ஹிந்தகல பிரதேசத்தில் வசிக்கும் திருமதி பீ. வீ. எஸ் அயிராங்கனி அரட ஆடை உற்பத்தி செய்யூம் பரம்பரையின் இன்றைய தலைமுறையாக உள்ளார்.

“எங்களுடைய பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து இந்தத் தொழில் வழங்கிவருகிறது. அப்பாவூக்கு அடுத்தபடியாக நானும் என்னுடைய அண்ணாவூம் இந்த தொழிலை செய்து வருகிறௌம். சாதாரணமாக நிலமே ஒருவருக்குத் தேவையான ஆடையைத் தயாரிக்க ஒரு வாரகாலம் அவசியம். நாங்கள் அரட ஆடையை உற்பத்தி செய்வதை போலவே அவற்றை வாடகைக்கு விடுவதும் உண்டு. நிலமே ஒருவருக்குத் தேவையான ஆடையை 75,000 ரூபாவூக்கு விற்பனை செய்யலாம். நான் ஆடைகளை விற்பனைக்காக வழங்கும் ஒரு சில விற்பனை நிலையங்கள் உள்ளன.

நான் HNB FINANCE இல் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கல்-வாங்கல் செய்ய ஆரம்பித்தேன். முதல் கட்டமாக 50000 ரூபாவை கடனாக பெற்றேன். அடுத்தபடியாக 150,000 ரூபாவை கடனாக பெற்றேன். வியாபார கடன் பெறுவதற்காக நான் வேறு எந்த ஒரு இடத்தையூம் நாடாமைக்கான காரணம் நான் HNB Finance இல் என்னுடைய முதலாவது கடன் தொகையை பெற்ற நாள் தொடக்கம் இதுவரை அங்குள்ள பணியாளர்கள் என்னை நடத்திய விதம்தான்.”

இன்னொரு விடயத்தையூம் கட்டாயமாக சொல்ல வேண்டியிருக்கிறது. என்னுடைய சில தங்க நகைகளை மீட்க முடியாத சு+ழ்நிலை வந்தபோது அதைப்பற்றி நான் HNB FINANCE தங்க கடன் பிரிவூ உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தினேன். உடனே அவர்கள் அந்த நகைகளை மீட்பதற்கு பணத்தை வழங்கினார்கள். இதை ஒரு வர்த்தக நிறுவனமாக இல்லாமல் எம்மைப் பற்றி சிந்திக்கும் எமது நிறுவனமாகவே நான் HNB FINANCE ஐக் காண்கிறேன்.

பீ. வீ. எஸ் அயிராங்கனி