011 202 4848

தனிநபர் கடன் ஒன்றைப் பெறுவதற்கு முன்னதாக கவனத்தில் கொள்ளவேண்டிய 06 விடயங்கள்

நீங்கள் உங்கள் குடும்பத்தாரை சிறந்த ஒரு விடுமுறையை கழிப்பதற்காக அழைத்துச் செல்ல எண்ணியுள்ளீர்களா? அப்படி இல்லாவிட்டால் சில நேரங்களில் திருமண விழா ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு மேலதிகமாக பணம் தேவைப்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும், குறுகிய காலத்திற்கு உங்கள் பணத்தேவையை முகாமைத்துவம் செய்துகொள்ள சிறு அளவில் உதவி தேவைப்பட்டால் அதற்கான ஒரே தீர்வாக இருக்கப்போவது தனிநபர் கடன்தான்.

எனினும், தனிநபர் கடன் ஒன்றைப் பெறுவது என்ற முடிவு இலகுவானதல்ல. அத்தகைய கடனைப்பெற விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக கவனத்தில் எடுக்க வேண்டிய பல காரணிகள் உள்ளன. நீங்கள் உங்கள் இலக்கினை அடையும் நோக்கத்துடன் வங்கிக்கடன் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில பிரதான விடயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. நீங்கள் தனிநபர் கடன் ஒன்றை எவ்வாறு பெற முடியும்?

நீங்கள், தனிநபர் கடன் ஒன்றைப் பெறுவதற்கு எங்கே செல்ல வேண்டும் என்று யோசித்தால் உங்கள் நினைவுக்கு வரும் முதலாவது இடம் வாங்கிதான். ஆனால், கடன்களைப் பெறுவதற்கான ஒரே தெரிவு வங்கி அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சமகாலத்தில் மிகத் துரிதமாக கடன்களை வழங்கும் நிறுவனங்களைக் காணலாம். உண்மையில், ஒரு சில நிறுவனங்கள் ஒன்லைன் (online) முறையில் கடன் வழங்குவதால் அவை மிகச் சிறந்த தெரிவாகக்கூட தென்படலாம். எவ்வாறாயினும், இவ்வாறான எல்லா நிறுவனங்களுக்கும் சட்ட வலிமை இல்லாததால், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து வரவைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நிதிச் சேவை மற்றும் நிதி முகாமைத்துவ வசதிகளை வழங்கும் எச்.சன்.பி பினான்ஸ் கம்பெனி போன்ற, மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதுதான் உங்களுக்கான பாதுகாப்பான தெரிவாக இருக்கும்.

2. நீங்கள் தனிநபர் கடன்பெறத் தகுதி பெறும் அளவுகோல்களை பூர்த்தி செய்கின்றீர்களா?

நீங்கள் தனிநபர் கடன் பெறத் தகுதி பெறுவதற்கு, பல கடன் வழங்கும் நிறுவனங்களின் வேறுபட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் வாயிலாக உங்களுக்கு கடனை மீளச் செலுத்தும் ஆற்றல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், கடனை மீளச் செலுத்தாத அல்லது தவணைக் கட்டணம் நிலுவையாகும்போது ஏற்படுகின்ற முரண்பாடுகளை தவிர்க்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் 24 – 50 வயதுக்கு இடைப்பட்ட ஒருவராகவும், கடன் தகவல் பணியக (க்றிப்) அறிக்கை திருப்தியான மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் உள்ள ஒருவராகவும் இருந்தால், நீங்கள் தனிநபர் கடன் பெறத் தகுதி பெறுவீர்கள்.

3. வட்டி வீதம் யாது?

வட்டி எனப்படுவது, நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகைக்கு மேலதிகமாக உங்களிடமிருந்து அறவிட்டுக்கொள்ளும் பணமாகும். பெற்றுக்கொள்ளும் கடன் வகைக்கு அமைய நீங்கள் மாதாந்தம் செலுத்த வேண்டிய வட்டி தீர்மானிக்கப்படும். ஆகவே, உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தை தெரிவு செய்யும்போது, வட்டி வீதம் குறைந்த நிறுவனங்களைத் தெரிவு செய்வது மிகவும் முக்கியமானது.

எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி ஆகிய நாம், சந்தையில் மிகவும் போட்டியான வட்டி வீதத்தை வழங்கும் நிறுவனமாக விளங்குவதால் கடனை இலகுவில் திருப்பிச் செலுத்தலாம்.

4. கடன் வசதியும் ஏனைய மேலதிக கட்டணங்களும்

ஒவ்வொரு கடன் வசதியுடனும் சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டணங்கள் உள்ளன. ஆவணங்களுக்கான கட்டணங்கள், முன்கூட்டியே செலுத்தி முடிப்பதற்கான கட்டணங்கள், மதிப்பீட்டுக் கட்டணங்கள், சட்டத்தரணிகளுக்குரிய கட்டணங்கள் மற்றும் தாமதத்திற்கான அபராதத் தொகை போன்ற செலவுகளை குறிப்பிடலாம். ஆகவே, நீங்கள் பிரதான கடன் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக உள்ள நிபந்தனைகளை நன்றாக வாசித்தறிந்து கடனுக்கு உரிய மேலதிக செலவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

5. கடன் நிபந்தனைகள் எவை?

உங்கள் கடனுக்கான கால எல்லையானது நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகை மற்றும் அத்தகைய முழு காலத்திற்கும் செலுத்த வேண்டிய வட்டியைத் தீர்மானிக்கின்றது.

எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி, நீங்கள் உத்தரவாதிகளை முன்னிறுத்தி கடன் பெறும்போது 05 வருட மீளச் செலுத்தும் காலத்தைக் கொண்டதாக ரூபா 75,000 தொடக்கம் 3,000,000 வரையான தொகையை வழங்கும். நிலையான சொத்து ஒன்றின் பேரில் கடன் பெறும்போது ரூபா 12,000,000 வரையான தொகையைப் பெறலாம்.

6. எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியில் தனிநபர் கடன் ஒன்றை பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் யாவை?

  • தொழில் தருநரிடம் பெற்ற சேவை அத்தாச்சிப்படுத்தல் கடிதம்.
  • வபதிவிட ஆதனத்தின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதனிலை அடகு
  • ஏற்றுக் கொள்ளக் கூடிய இரண்டு உத்தரவாதிகள் அல்லது பிணை
  • மதிப்பீட்டு அறிக்கையும் சம்பள விபரமும்
  • நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்தும் தேவையான ஆவணங்களைப் பெறக்கூடியதாகவும் இருந்தால், கடனுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து மூன்று நாட்களுக்குள் எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியில் தனிநபர் கடன் ஒன்றைப் பெற முடியும். அதுமாத்திரமன்றி, எச்.என். பி பினான்ஸ் கம்பெனி உங்களை நாடி வந்து வழங்கும் சேவையின் ஒரு பகுதியாக சந்தைப்படுத்தல் நிறைவேற்று உத்தியோகத்தர் ஒருவர் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களை நாடி வருவதால் தேவையற்ற சிரமத்தை தவிர்த்துக் கொள்ளவும் முடியும். மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 011202 4848.