கொழும்பு கண்டி வீதியில் கேகலை மொலகொடவை கடந்து செல்லும்போது, இடதுபுறத்தில் பலசரக்கு கடையுடன் ஒரு ஹோட்டலைக் காண முடியும். ஹோட்டல் ஊழியர்களுக்கு ஒரு கணம் கூட ஓய்வு கொடுக்காமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஹோட்டலில் வழங்கப்படும் உணவின் தரத்தையும் சுவையையும் பற்றி அமைதியாக சாட்சிசொல்லிக்கொண்டிருந்தார்கள். ஹோட்டலை ஒட்டிய பலசரக்கு கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் ஜயசிங்கவின் கெஷியர் கவுன்டருக்கு சற்று ஓய்வு கிடைத்து விடுமென்று நம்பி நாங்கள் அதற்கு முன்னால் காத்திருந்தோம். ஆனால், அந்த கனவு நனவாகாவே இல்லை. அவர் தன்னுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கும்போதே அவருடன் பேசுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. பேச ஆரம்பித்தோம்.
“… நான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஒரு சிறிய தேநீர் கடையைத் தொடங்கினேன், சில வருடங்கள் அந்தக் கடையை நடத்திய பின்னர், அதை கொஞ்சம் பெரியதாகவும், ஒழுங்காகவும் ஆக்க வேண்டும் என்று யோசித்தேன். நான் அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் எனது நண்பர் மூலமாக எச்.என். பி பினான்ஸ் கம்பனி பற்றி அறிந்து கொண்டேன். எனது நண்பரின் கருத்துபடி ஒரு வர்த்தகருக்கு இவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் கடன் பெற இதைவிடவும் சிறந்த இடம் எதுவுமில்லை. அதை பற்றி சற்று ஆராய்ந்த நான், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எச்.என். பி பினான்ஸ் கம்பனிக்குச் சென்று அங்குள்ள பண்யாளர்களைச் சந்தித்தேன். சந்தித்து நடத்திய முதல் கலந்துரையாடலிலேயே எனது தேவைக்கு மிகவும் பொருத்தமான இடம் இது என்பதை நான் உணர்ந்தேன். அதனால் என்னுடைய ஹோட்டலை தரமுயர்த்துவதற்கும் எச்.என். பி பினான்ஸ் கம்பனியிலிருந்து கடன் பெற்றேன்.
இவ்வாறு தொடங்கிய அந்த கொடுக்கல் வாஙகல் பிற்காலத்தில் எச்.என். பி பினான்ஸ் கம்பனியை என்னுடைய ஒரே நிதி பங்காளியாக மாற்றிவிட்டது. அன்று ஏற்பட்ட உறவின் பலன்தான் இந்த கடையும் ஹோட்டலும். அதன் பின்னர் எனது வர்த்தக தேவைகளுக்காக எச்.என். பி பினான்ஸ் கம்பனியிலிருந்து பல முறை கடன் பெற்றேன். அப்போது எனது வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய இரண்டு மாடி வீட்டை நிர்மாணிக்க விரும்பினேன். அதற்கும் நான் எச்.என்.பி பினான்ஸ் கம்பனியின் உதவியை நாடினேன்.
எங்களைப் போன்ற வர்த்தகர்கள் எச்.என். பி பினான்ஸ் கம்பனியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது எளிதானது, ஏனென்றால், நாங்கள் எடுத்த கடன்களை திருப்பிச் செலுத்தும்போது கூட, நாங்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று நேரத்தை வீணடிக்க தேவையில்லை; நிறுவனத்தின் பணியாளர்கள் எங்களை நாடி வந்து சரியான நேரத்தில் கடன் தவணைளை பெற்றுச்செல்வார்கள். இதனால் எங்கள் நேரம் சேமிக்கப்படுகிறது. எனது நண்பர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எச்.என்.பி பினான்ஸ் கம்பனியை அறிமுகப்படுத்த நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்” என ஹோட்டலின் பின்புறத்திலுள்ள காணியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனது இரண்டு மாடி வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றபடி திரு. ஜயசிங்க கூறினார்,
– லக்ஷமன் ஜயசிங்க
“லக்கி கஃபே” ஹோட்டல் மற்றும் பலசரக்கு கடை,
மொலாகொட,
கேகலை.