011 202 4848

வெற்றி கதைகள்

பல வருட காலமாக எங்களுடைய வியாபாரத்திற்கு பக்கபலமாக நின்ற நிதிப் பங்காளர் HNB FINANCE….

பித்தளை பொருள் தயாரிப்பு என்றாலே கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்திற்கு ஒரு தனி இடம் உண்டு….. பாரம்பரிய பித்தளை பொருள் தயாரிப்பை தமது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களை இந்த பிரதேசத்தில் காண்பது அரிது என்று சொல்லிவிட முடியாது…

பாரம்பரியமாக பித்தளையைப் பயன்படுத்தி சுரை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒருவரின் அன்பான மனைவி காந்தி ஜயமங்கள…… தனது கணவரின் வாழ்க்கைத் தொழிலுக்கு தொடர்ந்தும் பலமாக நின்று ஒரு மனைவியாக தான் வழங்கிவரும் பங்களிப்பை பற்றி அவர் எங்களிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்…

எனது கணவர் பாரம்பரியமாக பித்தளை பொருள் தயாரிப்பு தொழிலை கட்டிக்காத்து வரும் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் நானும் என்னால் முடிந்தளவில் அதற்கு உதவி வருகிறேன். பித்தளை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அந்தத் தொழிலை ஆரம்பிக்க தொடக்க மூலதன மிகவும் முக்கியமானது…. காரணம் மூலப்பொருளுக்கான செலவு அதிகம். அந்தவகையில் பணத்தட்டுப்பாடு ஏற்படும்போது நாங்கள் அதனை ஏதோ ஒரு வழியில் தேடிக்கொள்ள வேண்டும். அதுபோன்ற நிலை உருவாகும் போது எப்போதும் எனது நம்பிக்கையான தெரிவு HNB FINANCE கம்பனிதான்….
எனது கணவரின் வியாபாரத்திநற்கு பணம் தேவைப்படும்போது, நான் அதனை கடனாக பெற பல இடங்களுக்கு சென்றேன். அவ்வாறு சென்ற எந்தவொரு இடத்திலும் நான் எதிர்பார்த்த அளவில் பலன் கிடைக்கவில்லை. அதன் பின்னர் என்னுடைய கால்கள் HNB FINANCE கம்பனியை நோக்கி பயணித்தன. என்னுடைய ஒரு தோழிதான் அதற்கு வழிகாட்டி. அந்த நாள் இன்று போல் என் நினைவில் உள்ளது. நான் என்னுடைய தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அவர்கள் எங்களுடைய வியாபாரம் பற்றி ஆராய்ந்த பின்னர் உடனடியாக கடன் கிடைத்து. நான் HNB FINANCE கம்பனியில் முதல் தடவையாக 60,000 ரூபாவை கடனாக பெற்றேன். அதன் பின்னர் நானும் எனது கணவரும் கொடுக்கல் வாங்கலுக்கான தேவை ஏற்பட்ட எல்லா சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையுடன் சென்றது HNB FINANCE கம்பனிக்குத்தான்… கொடுக்கல் வாங்கலுக்கு அப்பால் வியாபாரம் பற்றிய அறிவையும்…நிதி ஒழுகலாறு பற்றிய அறிவுவையும் நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவு ஊழியர்கள் மூலமாக வழங்க HNB FINANCE கம்பனி தவறியதில்லை. 2019இல் இலங்கையின் பிரதானமான, நடுத்தர அளவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை இலக்காகக் கொண்டு கொழும்பில் நடத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் செயலமர்வில் பங்கேற்கும் வாய்ப்பை HNB FINANCE கம்பனி எனக்கு ஏற்படுத்தி தந்தது. இன்று எங்களால் ஒரு சிலருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது….. எங்களுடைய உற்பத்திப் பொருள்கள் கண்டியில் மட்டுமல்லாது புறநகர் பகுதிக்கும் அதேபோல கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எங்களுடைய வியாபாரத்தை நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல HNB FINANCE கம்பனியிலிருந்து கிடைத்த உதவியினை நன்றியுடன் நினைவு கூருகிறேன்..

காந்தி ஜயமங்கல
பாரம்பரியமாக பித்தளை பொருள் தயாரிப்பாளர்கள்
பிலிமதலாவ,
கண்டி.