011 202 4848
Appropriately facilitate principle-centered bandwidth.

YouLead பூர்வாங்க முயற்சி

Continually customize cross-platform information for team driven content. Seamlessly.

USAID முகவராண்மையின் YouLead பூர்வாங்க முயற்சியுடன் HNB FINANCE நிறுவனம் கூட்டாண்மையை ஆரம்பிக்கின்றது.

தொழில் முயற்சியாளர்கள், நுண் , சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் (MSME’s) மற்றும் கடன் நிறைவேற்று உத்தியோகத்தர்களக்கான செயலமர்வு மற்றும் கருத்தரங்கு

நாட்டின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட தொடர் செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்காக இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான HNB FINANCE நிறுவனம் USAID நிறுவனத்துடன் கூட்டாண்மையை ஆரம்பித்துள்ளது.
“நாட்டின் அபிவிருத்தி மற்றும் நாடு பூராவும் எமது வாடிக்கையாளர் தளம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட வளர்ச்சியுடன் HNB FINANCE நிறுவனம் தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். YouLead உடனான கூட்டாண்மை ஒரு தனித்துவமான தளம் மற்றும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது, மேலும் எங்களுக்கும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர் தளத்திற்கும் மிகவும் தேவையான நிதி அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும். தமது வணிகங்களுக்குகான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான திறன்களை வழங்குதல் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க உதவுதல். அத்துடன் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக எமது வாடிக்கையாளர்கள் குறிப்பாக பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறையில் ஈடுபடுகின்றவர்களை சிறந்த வகையில் ஒழுங்குபடுத்தல் இந்தச் செயலமர்வின் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நாங்கள் நம்புகின்றோம். என HNB FINANCE நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. சமிந்த பிரபாத் அவர்கள் தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வு மற்றும் கருத்தரங்குத் தொடர் மூலம் வெற்றிகரமாக வணிகத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு அதனைப் பேணி அபிவிருத்தி செய்யும் விதம் பற்றி பெறுமதியான தொழில் நுட்ப மற்றும் நிதிசார் அறிவினை வழங்குவது இதன் நோக்கமாகும். வாடிக்கையாளர்களுக்கு தமது நிதி நோக்கத்தை அடைந்து கொள்ளுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கான தேர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு HNB FINANCE நிறுவனத்தின் கடன் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் செயலர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டனர்.

” YouLead கருத்திட்டம் இலங்கையின் திறமையான இளைஞர்களை அவர்களின் தொழில் அபிலாஷைகளையும் பொருளாதார எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்வதை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில் முயற்சி என்பது எதிர்காலத்தின் இன்றியமையாத பகுதியாகும், மேலும் வேகமாக மாறிவரும் உலகில் முன்னேற ஒரு வழியைக் கண்டுபிடிக்க சிறந்த நிலையில் இருப்பவர்கள் இளைஞர்களாவர் HNB யின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த இளம் தொழில் முயற்சியாளர்களில் சிலர் நாளை கண்டுபிடிப்பாளர்களாகவும் சிறந்த தொழில் வழங்குநர்களாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம், ”என்று கருத்திட்டப் பணிப்பாளர் திரு. கொன்கோனி தெரிவித்தார்.

YouLead என்பது இலங்கையில் இளைஞர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை ஊக்குவிப்பதற்காக சர்வதேச நிறைவேற்றுச் சேவை படையணி (IESC) இனால் USAID நிதியத்திக் மூலம் செயற்படுத்துகின்ற நிகழ்ச்சித் திட்டமாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களை ஆதரிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மிகவும் திறமையான மற்றும் நெகிழ்வான பணியாளர்களை உருவாக்குவதை YouLead நோக்கமாகக் கொண்டுள்ளது. YouLead இளம் தொழில் முயற்சியாளர்களின் வணிகத் திறன்களையும் அவர்களின் வணிகத் திட்டங்களின் தரத்தையும் மேம்படுத்துவதோடு, நிதி நிறுவனங்களில் இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு கடன் வழங்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு YouLead குறித்த நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்படும்.

வேலைவாய்ப்புக்கான உடனடி மாற்றத்தை செயல்படுத்துகின்ற சந்தைப்படுத்தல் திறன்கள் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே ஆக்கத்திறன் வாய்ந்தஊழியர்களாக மாறும் திறனை இலங்கையில் உள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக YouLead தனியார் துறையுடனும் நெருக்கமாக செயல்படுகிறது.
2000 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட HNB FINANCE நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் பதிவு செய்த உத்தரவு பெற்ற நிதி நிறுவனமாகும். ஹட்டன் நஷனல் வங்கியின் 650 தன்னியக்க டேலர் இயந்திரத்தின் பலத்துடன் 48 கிளைகள் 21 சேவை நிலையங்கள் ஊடாக விரிவான நாடு தழுவியதான HNB FINANCE நிறுவனம் சமீபத்திய காலங்களில் புதிய வணிக முயற்சிகளை விரிவாக்கம் செய்துள்ளது. இப்போது சேமிப்பு, தங்கக் கடன், நிலையான வைப்பு வசதிகள் மற்றும் லீசிங் வசதிகளுக்கு மேலதிகமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி (SME) கடன்களையும் வழங்குகிறது.