தங்க கடன் என்றால் என்ன?
தங்கக் கடன் என்பது உங்கள் தங்க ஆபரணங்கள் அல்லது தங்கப் பொருட்களை அடமானமாக வைத்து பெறக்கூடிய ஒரு பாதுகாப்பான கடன் வசதி ஆகும். HNBF விரைவான சேவை மற்றும் நெகிழ்வான குறுகிய கால கடன் வசதிகளை வழங்குகிறது.
HNBF-இல் தங்கக் கடன் பெற தகுதி என்ன?
நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை குடியுரிமை கொண்ட நபராக இருக்க வேண்டும் மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் அல்லது தங்க பிஸ்கெட்டுகள் போன்ற தங்கப் பொருட்களை கொண்டிருக்க வேண்டும்.
HNBF-இல் தங்கக் கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவையாகும்?
அடையாள ஆவணம் (உதாரணம்: தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், அல்லது ஓட்டுநர் உரிமம்)
தங்கக் கடனின் வட்டி விகிதம் என்ன?
கடன் கால அவகாசத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும். உதாரணமாக, மாதாந்திர வட்டி விகிதம் 1.42% முதல் 1.80% வரை இருக்கலாம்.
HNBF தங்கக் கடனின் சாதாரண கால அவகாசம் என்ன?
கடன் காலம் 1 மாதம் முதல் 12 மாதங்கள் வரை இருக்கும். (உதாரணம்: 1, 2, 3, 4, 6, 9 மற்றும் 12 மாதங்கள்)
HNBF தங்கக் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் முறைகள் என்ன?
பகுதி கட்டணம், புல்லட் கட்டணம், மற்றும் முன்கூட்டிய மீட்பு போன்ற திருப்பிச் செலுத்தும் வசதிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள். சேர்க்கப்பட்ட வட்டியை செலுத்தி கடனை மறுபுதுப்பிக்கவும் (renew) முடியும்.
HNBF-இல் கடனை திருப்பிச் செலுத்த தவறினால் என்ன ஆகும்?
வட்டி அல்லது கடன் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உரிய நினைவூட்டல்கள் (reminders) அனுப்பப்படும், இதனால் ஏலத்தைத் தவிர்க்க முடியும். கடனை திருப்பிச் செலுத்த தவறினால், நிலுவையில் உள்ள தொகையை மீட்டெடுக்க HNBF நீங்கள் அடமானம் வைத்த தங்கத்தை ஏலத்திற்கு விடலாம்.
HNBF-இல் நான் அடமானம் வைத்த தங்கத்தை எப்படி மீட்டெடுக்கலாம்?
கடன் தொகையையும் அதற்கு பொருந்தும் வட்டி மற்றும் கட்டணங்களையும் செலுத்துவதன் மூலம் உங்கள் தங்கத்தை மீட்டெடுக்கலாம்.
மீட்பு (Redemption) செயல் அசல் கடனாளரால் அல்லது எழுத்து மூலம் அனுமதி பெற்ற மூன்றாம் நபரால் செய்யப்படலாம்.
HNBF தங்கக் கடனுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் உள்ளனவா?
HNBF “Gold Plan” எனும் சிறப்பு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தவணைகளில் (installments) கட்டி தங்க ஆபரணங்களை வாங்கலாம்.
இது திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கும், சிறப்பு நிகழ்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
HNB FINANCE Call Centre: 0112024848