011 202 4848

Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் HNB Finance இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது

இலங்கையின் நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் தமது பெயரை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் முதன்மையான இரு விருதுகளை தனதாக்கிக் கொள்வதற்கு HNB Financeக்கு முடிந்துள்ளது. இலங்கையில் நிதி நிறுவனங்களுக்கு இடையில் விசேட விற்பனை மற்றும் இலச்சினை அறிமுகமாகவும் இலங்கையில் வங்கியல்லா நிதி நிறுவனங்களில் விசேட இணையத் தளமாகவும் இம்முறை மதிப்பீடு செய்யப்பட்ட ஒரேயொரு இலங்கை நிதி நிறுவனமாக மாற்றமடைவதற்கு HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக சரித்திரத்தில் முதல் முறையாக இணைத்தளம் ஊடாக டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வாக இடம்பெற்ற Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்விற்காக இம்முறை ஆசியாவின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் பலவும் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

HNB Finance நிறுவனம் இணைத்தளத்திற்குள் மற்றும் அதற்கு வெளியேயும் மேற்கொண்டுள்ள விற்பனை மற்றும் இலச்சினை அறிமுகத்தின் மூலம் பெற்றுக் கொண்ட வர்த்தக நன்மைகள், புத்தாக்கங்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காண்பிக்கும் விசேடத்துவம் மட்டுமன்றி ஒப்பிட முடியாத டிஜிட்டல் நிதி சேவைகளை வழங்குதல் குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றியடைந்துள்ளதுடன் இது தொடர்பில் பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. கடந்த காலங்களில் HNB Financeஇனால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிதி சேவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளுடன் நன்றாகப் பொருந்தியதுடன் மூலோபாய முதலீட்டாளர்கள் மற்றும் பிராண்டிங் செயல்முறை ஆகியன நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு பாரிய பலத்தை சேர்த்துள்ளது.

“வங்கி மற்றும் நிதித் துறையில் சிறந்ததொரு மதிப்பீடாக கருதப்படும் Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் முதன்மையான இரு விருதுகளை தனதாக்கிக் கொள்வதற்கு முடிந்தமையானது எமது வர்த்தக பயணத்தின் மைல் கல்லாக அமைவதுடன் மிகுந்த கௌரவமாகவும் கருதமுடியும். ஆசியாவின் சிறந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பல விருதுக்காக விண்ணப்பிக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் மதிப்பீட்டுக்கு தகுதி பெற்றதன் மூலம் கடந்த காலங்களில் எம்மால் செய்யப்பட்ட முதலீடுகளின் துல்லியமான நிலை நிரூபிக்கப்பட்டுள்ளதை சிறந்த விதத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எமது சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் சர்வதேச மட்டத்திலான சேவை அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கவும் முடிந்துள்ளது.” என HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்துள்ளார்.

HNB Finance நிறுவனத்தின் இணையத்தளமானது பல மொழிகளுடன் கூடிய விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை சரியான விதத்தில் புரிந்து கொண்டு அந்த தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளுடன் கூடிய விதத்தில் இந்த இணையத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை வென்ற HNB Finance இணையத்தளம் வெறுமனே தகல்களை மாத்திரம் வழங்குவது மட்டுமன்றி முதலீடுகளின் போது வாடிக்கையாளர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களுக்காக பெற்றுக் கொடுத்த தகவல்கள் ஆதாரமாக இருப்பதுடன் இதில் உருவாக்கப்பட்டுள்ள கடன், குத்தகை, மற்றும் ஏனைய நிதி சேவைகளுக்கு உரிய கணக்கீட்டு வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய கடனின் பெறுமதி, செலுத்தும் திறன், வட்டி மற்றும் கால எல்லை குறித்தும் தெளிவான விடயங்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன் தமக்கு தேவையான நிதி சேவைகள் குறித்து சரியான கருத்தினையும் பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு முடியும். மேலும் கடன் மற்றும் நிதி வசதிகளுக்கு உரிய விண்ணப்பங்கள் மற்றும் உரிய பதில்களையும் பெற்றுக் கொள்ளுதல் போன்ற வசதிகள் மூலம் எவ்வித தாமதங்களும் இன்றி தமது நிதிச் சேவைகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு முடியும்.

தொடர்ச்சியாக 9ஆவது தடவையாகவும் அண்மையில் இடம்பெற்ற Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் ஆசிய பிராந்தியத்தின் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் முன்னணி விருது வழங்கும் நிகழ்வாக இது கருதப்படுகிறது. இதன்போது இந்த பிராந்தியத்திலுள்ள 30 நாடுகளுக்கான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் முன்வைக்கப்படும் விசேட சேவைகள், செயற்திட்டங்கள், கொடுக்கல் வாங்கல் மற்றும் அணுகல்கள் ஆகியன மதிப்பீடு செய்யப்படுகின்றன. ASEAN, Ernst and Young, Deloitte & Touche LLP, PwC, KPMG, APAC, போன்ற சர்வதேச தணிக்கை மற்றும் நிதி சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் உறுப்பினர்களினால் உருவான நடுவர்களினால் இந்த விருதுக்கு பாத்திரமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.