logo
011 202 4848

தங்கக் கடன் வசதி என்றால் என்ன? அது எவ்வாறு தொழிற்பாடும்

இலங்கையிலும் உலக நாடுகளிலும் தங்கமானது அதன் நிதி சார்ந்த பெறுமதியினால் மட்டுமல்லாது, வெளிப்பாட்டு உணர்வினாலும் மதிப்பை பெற்றுள்ளது. அநேகமானவர்களுக்கு தங்க ஆபரணங்கள் வழிவந்த சொத்தாக கிடைப்பதோடு, எதிர்கால முதலீடாக தங்க நாணயங்களைக் கொள்வனவு செய்தல் அல்லது பரிசுப் பொருளாகவும் கிடைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் பெறுமதிவாய்ந்த இந்த உலோகத்தை அவசர நிதித் தேவையின்போது காசுப் காய்ச்சலுக்கான ஒரு சொத்தாக பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? தங்கக் கடன் பற்றியும், அதைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய எல்லா விடயங்களையும் வாசியுங்கள்.

தங்க கடன் என்றால் என்ன?

தங்கக் கடன் இல்லாவிட்டால் “தங்கத்தை அடமானமாக வைத்து பெற்றுக்கொள்ளும் கடன்” என்பது வாடிக்கையாளர்கள் வேறொரு சொத்துக்குப் பதிலாக தமது தங்க ஆபரணங்களை அடமானம் வைத்து, கடன் வழங்கும் ஒரு நிறுவனத்திலிருந்து பெறக்கூடிய கடன் வசதி ஆகும். தங்கத்தை பரிசோதித்து அதன் பெறுமதியை மதிப்பீடு செய்த பின்னர் கடன் வழங்கப்படுவதுடன், அந்தத் தொகை தங்கத்தின் மொத்த பெறுமதியில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை கொண்டிருக்கும். தங்கக் கடன் திட்டமானது குறுகிய கால நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்கான வேகமான மற்றும் இலகுவான ஒன்றாக இருப்பதால், அது இலங்கையில் மிகப்பரவலாக பயன்பாட்டில் உள்ளது.

தங்கக் கடன் வசதி எவ்வாறு தொழிற்படுகிறது?

இதர கடன் வகைகளுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் வசதியானது பிரத்தியேகமான செயல் முறையைப் பின்பற்றி செயற்படுத்தப்படுகிறது. வருமானத்தை அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்கள் அல்லது உத்திரவாதிகள் அவசியமற்ற இத்திட்டம் உண்மையில் அடகு வைக்கும் செயற்பாட்டை ஒத்ததாக இருப்பதோடு, நீங்கள் உங்களுடைய தங்க ஆபரணத்தை ஒப்படைத்து கடனைப் பெறலாம்.

அதிநவீன இயந்திரச் சாதனங்களை தன்வசம் வைத்துள்ள எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியின் கூர்மையான அனுபவம் கொண்ட பணியாளர்கள், எமது வாடிக்கையாளர்களுக்கு குறைவான சிரமத்துடன் உன்னதமான சேவையை வழங்க எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்; அதாவது, உங்களுடைய தங்க ஆபரணம் 18-24 கரட் பெறுமதியைக் கொண்டிருப்பதை அத்தாட்சிப்படுத்தும் ஆவணத்துடன் வரவேண்டும். சோதித்து பார்த்த பின்னர் நாம் அனுமானிக்கும் கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படுவதோடு அதன்படி உங்கள் தங்கத்திற்கான பணம் உங்களுக்கு கிடைக்கும்.

கடன் ஒப்பந்தத்தின்படி, நீங்கள் வட்டியுடன் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும். அதன் பின்னர், நீங்கள் பிணையாக வைத்த தங்கத்தை மீளப் பெறலாம். எச். என். பி பினான்ஸ் கம்பெனியில் எல்லாவிதமான தங்கம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் – வாங்கல்கள் மற்றும் சோதிப்புகளுக்கு விசேட நடைமுறை அமுலில் உள்ளது. பெறுமதியான இந்த உலோகத்திற்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடன் பெறத் தகுதியுடையவர்கள் யாவர்?

எமது தங்க கடன் சேவை துரிதமானதாகவும் எளிதாகவும் அதேபோல், எல்லோரும் அணுகக்கூடிய ஒன்றாக இருப்பதால் சிறந்த நிதி சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. 16 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு பூராகவும் அமைந்துள்ள கிளைகளிலும் இந்தச் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். கடனைப் பெறுவதற்கு நீங்கள் கொண்டு வர வேண்டியது அடையாள அட்டை மற்றும் தங்க ஆபரணம் ( தங்க நாணயங்கள், தங்கக் குற்றிகள்) மட்டுமே.

தங்க கடனுக்குரிய கால எல்லை யாது?

ஏனைய கடன் வசதிகளுடன் ஒப்பிடும்போது இதற்கான கால எல்லை மிகவும் குறுகியது. எனினும், கடனை மீளச் செலுத்தும் வழிமுறை மிகவும் நெகிழ்வானது. எச்.என்,பி வாடிக்கையாளர்கள் தமக்குப் பொருத்தமான மீளச் செலுத்தும் முறையைத் தெரிவு செய்யலாம். இதில் பத்து நாட்கள், 03 மாதங்கள், 06 மாதங்கள் அல்லது ஒருவருட கால தாமதம் ஏற்படலாம். அதேபோல், எமது வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன் சேவை வழங்கப்படும் எந்தவொரு கிளையிலும் கடனுக்கான தவணைக் கட்டணத்தையும் வட்டியையும் செலுத்த முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு eZ cash மற்றும் mCash ஊடாகவும் கொடுப்பனவுகளைச் செலுத்தலாம். அதுமாத்திரமன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களுக்காக கடன் பெற்றிருந்தால், நீங்கள் செலுத்தும் தொகைக்கு அமைய தலா ஓர் ஆபரணத்தை விடுவித்துக்கொள்ள முடியும்.

எச்.என்.பி பினான்ஸ் தங்கக் கடன் பெறுவதிலுள்ள நன்மைகள்.

எச்.என்.பி பினான்ஸ் தங்கக் கடன் பெறுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு,:

 • குறைந்த வட்டி வீதம் – தங்க ஆபரணங்கள் பிணையாக கருதப்படுவதால் தங்கக் கடனுக்கான வட்டி வீதம் சந்தையில்
  நிலவும் மிகக் குறைந்த வட்டி வீதமாக இருக்கும். அதேபோல், இந்தக் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் ஒப்பீட்டளவில்
  குறைவான மீளச் செலுத்தும் தவணைக் கட்டணமாக மாறும்.
 • தங்க ஆபரணங்களுக்கு இலவச காப்புறுதி காப்பீடு – எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியில் தங்கக் கடன் ஒன்றைப்
  பெறும்போது, நாம் உங்கள் தங்க ஆபரணங்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
 • ஆவணங்களுக்கான கட்டணங்கள், சேவை கட்டணங்கள் அல்லது வேறு மறைமுக கட்டணங்கள் இல்லை – எச்.என்.பி
  பினான்ஸ் கம்பெனியின் கடன் செயலாக்க நடவடிக்கை சிரமங்கள் இன்றி துரிதமாக நடைபெறுவதால் கடன் வழங்கும்
  செயற்பாட்டில் சிரமங்களுக்கு வாய்ப்பில்லை.
 • இரகசியம் பேணப்படும் – பெற்றுக் கொள்ளும் எல்லா தகவல்களும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட
  விதமாகவும் வைத்து பேணப்படும்.
 • நெகிழ்வான பயன்பாடு – ஏனைய கடன் வசதிகளைப் போலல்லாது, தங்கக் கடன் மூலமாக பெறும் பணத்தை உங்கள்
  விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செலவு செய்யலாம். அதைப்போல், எந்தவொரு செலவையும் தீர்ப்பதற்கான நிதியாகவும்
  பயன்படுத்தலாம்.
 • பயன்படாத சொத்துகளை திரவத் தன்மைகொண்டதாக மாற்றுதல் – இறுதியாக, தங்கம் எனப்படுவது அனுதினமும்
  பயன்படாத சொத்தாக இருப்பதால் நீங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இது
  உங்களுக்குத் தேவையான மூலதனத்தை வழங்கும்.
 • சொத்தை உடனடியாக மீளப் பெறலாம் – எத்தகைய முன்னறிவித்தலும் இன்றி உங்கள் தங்க ஆபரணத்தை மீளப்
  பெறலாம்.
 • தங்க ஆபரணங்களை விடுவித்துக் கொள்ளும் வசதி – நீங்கள் வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ள, உங்கள்
  உரிமையை உறுதிப்படுத்தாத தங்க ஆபரணங்களை ஏலத்தில் விடுவதற்கு முன்னர் விடுவித்துக்கொள்ள எச்.என்.பி
  பினான்ஸ் கம்பெனியின் உதவியைப் பெறலாம்.
 • துரிதமான மற்றும் பாதுகாப்பான சேவை – வாடிக்கையாளர்களின் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக
  COVID-19 தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டதாக 03 நிமிட காலத்தினுள் சேவைகள் வழங்கப்படும்.
 • பெரும்பாலானவர்கள் தமது தங்க ஆபரணங்களை நிதி நிறுவனங்களில் அடகு வைக்கும்போது மிக அவதானமாக இருக்கின்ற போதிலும், அதனால் உறுதியாக கிடைக்கின்ற சில நன்மைகள் உள்ளன. தங்கக் கடன் வசதியானது உங்களுடைய தங்க ஆபரணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதோடு, துரிதமாகவும் இலகுவாகவும் பணத்தை பெறக்கூடிய வழிமுறையாகவும் உள்ளது. மறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லாத, சிரமங்கள் இல்லாத வழிமுறை ஊடாக aஎச்.என்.பி பினான்ஸ் கம்பெனியில் தங்கக் கடன் வசதியை பெற்று உங்களுடைய எதிர்கால திட்டத்தை நநடைமுறைப்படுத்துங்கள்.