முன்னணி வரிசையிலுள்ள ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தமது முச்சக்கர வண்டிகளை லீசிங்குக்கு எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளுடன் “Three-wheel Leasing Waasi Wisthare” என்ற சிறப்பு லீசிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஒரு நெகிழ்வான மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட லீசிங் பாதையானது, வாடிக்கையாளருக்கு எந்த இடையூறுகளையும் தவிர்க்கும் அதே வேளையில் விரைவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை உறுதி செய்கிறது.
“இலங்கையின் நிதித் துறையில் முற்போக்கான மற்றும் புத்தாக்கமான நிதிச் சேவை வழங்குனராக, வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சேவையின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் முயற்சிகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எங்கள் ஒட்டுமொத்த பார்வை மற்றும் பணியை நாம் பிரதிபலிக்க வேண்டும். “Three-wheel Leasing Waasi Wisthare” மேம்பாட்ட நடவடிக்கை இதற்கு ஒரு சிறந்த உதாரணம், இது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.” என HNB FINANCE PLCன் சந்தைப்படுத்தல் பிரதான உதார குணசிங்க தெரிவித்தார்.
“Three-wheel Leasing Waasi Wisthare” திட்டத்தின் மூலம் லீசிங்குக்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பதிவு மற்றும் ஆவணக் கட்டணங்கள் இல்லை என்பதுடன், இலவச காப்புறுதியுடன் இரண்டு டயர்களும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், திட்டத்தை செயல்படுத்தும் காலகட்டத்தில் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் மேலும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் அடுத்த மாதத்திற்கான லீசிங் கட்டணத்தை செலலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
“நாங்கள் பல நன்மைகள் மூலம் அதிகபட்ச மதிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், எங்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களின் மன உறுதியை அதிகரிக்க எந்தவொரரு எல்லைக்ககும் செல்வோம் மற்றும் மாதந்தோறும் முறையாக தேர்ந்தெடுக்கும் 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத குத்தகையை கழிவாக வழங்குகிறோம்! முச்சக்கர வண்டியை குத்தகைக்கு எடுக்கும் எமது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தினசரி ஊதியம் பெறுபவர்கள் என்பதால் இது ஒரு பாரிய அனுகூலமாகவும் கவர்ச்சிகரமான நன்மையாகவும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.