011 202 4848

செய்திகள்

HNB FINANCE இன் மத்துகம கிளையின் தங்கக் கடன் நிலையம்

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, களுத்துறை மாவட்டத்தில் தங்கக் கடன் சேவைகளுக்கான அதிக தேவையை கருத்திற் கொண்டு, இல. 143, அகலவத்த வீதி, மத்துகம என்ற முகவரியில் அமைந்துள்ள தமது மத்துகம கிளையில் தனது சமீபத்திய தங்கக் கடன் மத்திய நிலையத்தை திறந்துள்ளது.

HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், புதிய தங்கக் கடன் நிலையத்தை திறந்துவைத்தார், தங்கத்திற்கான சிறந்த பெறுமதியை குறைந்த வட்டி விகிதத்திலும், எந்தவொரு ஆவணங்கள் அல்லது மறைக்கப்பட்ட கட்டணங்களும் செலுத்தாமல் தங்க நகைகளை மிகக் குறைந்த நேரத்தில் மீட்பதற்கு தேவையான வசதிகளையும் செய்ய HNB FINANCE நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்துகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதால், நாங்கள் எங்கள் மத்துகம கிளையில் தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்துள்ளோம். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகள் மற்றும் தங்கக் கடன் வசதிகளை தடையின்றி வழங்குவதில் நாங்கள் முன்னணியில் இருப்போம் என்று நான் நம்புகிறேன்.” என HNB FINANCEஇன் தங்க கடன் பிரிவின் பிரதானி லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அன்றாட நடவடிக்கைகளுக்கு விரைவான மற்றும் எளிமையான பணப்புழக்கம் இன்றியமையாதது என்பதால், கடனைப் பெற விரும்பும் பல வணிகங்கள் அதிக வட்டி விகிதக் கடனுக்கு விண்ணப்பிக்க முனைகின்றன அல்லது வேறு எந்த வழியிலும் விரைவாக பணத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், HNB FINANCE தங்கக் கடன்கள் எந்தவொரு வணிகம் போன்றே, தங்களுடைய தங்க ஆபரணங்களை வைத்து கடனைப் பெற விரும்பும் எவருக்கும் அவர்களின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், HNB FINANCE மத்துகம கிளை வார நாட்களில் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.

HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.