logo
011 202 4848
News

தனது நெல்லியடி கிளையை புதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE

24th ஆகஸ்ட், 2026

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது நெல்லியடியிலுள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. HNB FINANCE நெல்லியடி கிளையானது 216/1, யாழ்ப்பாணம் வீதி நெல்லியடி என்ற புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்ற நிகழ்வு HNB FINANCE PLC முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்விற்கு சிரேஷ்ட முகாமைத்துவம் பிரிவு மற்றும் கிளை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

நெல்லியடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை காணப்படுவதால், HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இவற்றில் தங்கக் கடன், தங்கம் வாங்குவதற்கான முதலீட்டுத் திட்டமான Gold Loan மற்றும் VIP Gold Loan ஆகியவை சிறப்பாக அறிமுகப்படுத்தப்படலாம்.

நெல்லியடி கிளை இடமாற்ற நிகழ்வின் போது கருத்து தெரிவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “இந்தக் கிளையைத் திறப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். HNB FINANCE 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வளர்ந்து வரும் நிறுவனமாக நிறுவப்பட்டது. எங்கள் நிறுவனம் அனைத்து வசதிகளையும் வழங்கும் திறன் கொண்டது.” என தெரிவித்தார்.