பணத்தைச் சேமிப்பதற்கான எளிதான மற்றும் வேகமான வழிகளில் ஒன்றாக அறியப்படும் நிலையான வைப்பு என்பது, எளிதில் ஆரம்பிக்கக்கூடிய மற்றும் அதிக நன்மைகளைத் தருகின்ற பாதுகாப்பான ஒரு முதலீட்டுத் தெரிவாகும். ஒரு நிலையான வைப்பின் மூலம் உங்களுக்கு உங்களுயை சேமிப்புத் திட்டத்தின் தொடக்கத்திலேயே நன்மைகள் கிடைப்பதை நீங்கள் இப்போதே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
நிலையான வைப்புகளைப் பற்றி நீங்கள் உண்மையாகவே மேலும் அறிய விரும்பினால், ஒரு நிலையான வைப்பு உங்கள் வாழ்க்கைக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்தும் எங்கள் அனுகூலப் பட்டியலை வாசியுங்கள்.
நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை தொடங்க இருப்பீர்களானால், நிலையான வைப்பு உங்களுக்கு உதவும் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். ஓர் ஆரம்பக் கொடுப்பனவின் தேவையுடன், நிலையான வைப்பு உங்கள் பணத்தை அதிகபட்ச நன்மைகளுடன் திருப்பித் தரும். எச்.என்.பி பினான்ஸ் நிறுவனத்தில் உங்களுக்கு 12, 24 மற்றும் 60 மாதங்கள் வரையான ஒரு நிலையான காலத்திற்கு நீங்கள் சிறந்த நிலையான வைப்புத் திட்டங்களைப் பெறலாம்.
நீங்கள் உங்கள் இல்லத்தை அமைக்க, சுற்றுலாச் செல்ல அல்லது புதிய தொலைபேசி ஒன்றைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தால், கண்டிப்பாக உங்களிடன் ஒரு தொகை பணம் இருக்க வேண்டும். அத்தருணத்தில்தான நிலையான வைப்புத்தொகை உங்களுக்கு பயன்படும். எச்.என்.பி பினான்ஸ் நிறுவனத்தில் நீங்கள் இப்போது ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கால எல்லையின் அடிப்படையில் மிகச்சிறந்த நிலையான சேமிப்புத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிகூடிய நன்மைகளைப் பெற உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.
நீங்கள் உங்கள் பணத்தில் கரிசனை இல்லாதவராக இருந்தால், உங்கள் நிதியை முகாமைத்துவம் செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நிலையான வைப்பு உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து உங்கள் எல்லா முதலீடுகளுக்கும் அதிக வட்டி வீதத்தைப் பெறுங்கள். அதிகமாகச் சேமிக்க இப்போதே எச்.என்.பி பினான்ஸ் நிலையான வைப்பு கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.
ஒரு நிலையான வைப்புத் திட்டம் அதிக வட்டி வீதத்தை வழங்கி உங்கள் முதலீடுகளில் அதிகமாகச் சேமிக்க உதவுகிறது. இலங்கையில் உள்ள ஏனைய வங்கிகளை விட நீங்கள் அதிகமான நன்மைகளைப் பெறுவதை இது உறுதி செய்கிறது. எச்.என்.பி பினான்ஸ் வட்டி வீதங்களுடன் உங்களுக்கு மாதாந்த, வருடாந்த முதிர்வு அடிப்படையில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எச்.என்.பி பினான்ஸ் நிறுவனத்தினால் தற்போது உங்களுக்காகவே வழங்கப்படுகின்ற ஒரு நாள் சேவை மற்றும் உங்கள் வசிப்பிடத்தை நாடிவந்து வழங்கப்படும் உதவியின் மூலம், உங்களது வைப்பின் காலத்தை அடிப்படையாகக் கொண்ட, அதிக வட்டியுடனான மாதாந்த நிலையான வைப்பைத் தெரிவு செய்யலாம். நாங்கள் முதிர்வின்போது உடனடியாக பணத்தை திருப்பிச் செலுத்துவதோடு, இலங்கையில் மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நிலையான வைப்புக்கான வட்டி வீதங்களை வழங்குகிறோம். உங்கள் வசதி கருதி, உங்களுக்கு எங்களுடைய நாடளாவிய கிளை வலையமைப்பை அணுகவும் வாய்ப்பு வழங்கப்படும்.
நீங்கள் நிலையான வைப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கிளையில் ஒப்படைக்கவும். தயவுசெய்து, உங்கள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டைக் கொண்டு வர மறக்காதீர்கள்.