logo
011 202 4848
விளம்பர நடவடிக்கைகள்

படம் வரையுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்! 🎨

5th அக்டோபர், 2026

இந்த ஒக்டோபர் மாதத்தில், சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில்,
“நானும் என் நண்பனும்” என்ற கருப்பொருளின் கீழ், HNB Finance Yalu கதாபாத்திரத்தை உள்ளடக்கி உங்கள் கற்பனையை ஓவியமாகத் தீட்டுங்கள்.

உங்கள் பிள்ளையின் ஓவியத்தை அவர்களின் பெயர், வயது, பாதுகாவலரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் 0710292109 எனும் இலக்கத்திற்கு WhatsApp செய்யுங்கள்.

அல்லது, அருகிலுள்ள HNB Finance கிளையில் ஒப்படையுங்கள்.
5–7, 8–10 மற்றும் 11–13 ஆகிய மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, Scooter, Melodica, Bicycle, Organ மற்றும் பாடசாலை உபகரணத் தொகுப்புகள் உள்ளிட்ட பல பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லுங்கள்!

விரைந்து செயல்படுங்கள்! ஒக்டோபர் 05 முதல் 25 வரை மட்டுமே.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது!

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

1. 5 முதல் 13 வயது வரையிலான சிறுவர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
2. பங்கேற்பாளர்கள் தமது ஓவியத்தை 2026 ஒக்டோபர் 05 முதல் ஒக்டோபர் 25 வரையிலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்டுள்ள WhatsApp இலக்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் அல்லது தமக்கு அருகிலுள்ள HNB Finance கிளையில் ஒப்படைக்க வேண்டும்.
3. ஒவ்வொரு ஓவியமும் பங்கேற்கும் பிள்ளையினால் உருவாக்கப்பட்ட சுயமான படைப்பாக (Original) இருக்க வேண்டும் என்பதுடன், அது பிள்ளையின் சுயமான படைப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பாதுகாவலர் ஓவியத்தின் மீது கையொப்பமிட வேண்டும்.
4. ஒரு பிள்ளைக்கு ஒரு ஓவியத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
5. போட்டியில் பங்கேற்கும் பிள்ளையிடம் செயலில் உள்ள (Active) HNB Finance Yalu சேமிப்புக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும். Yalu கணக்கு இல்லாதவிடத்து, இறுதி ஓவியத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
6. அரைகுறையான தகவல்களைக் கொண்ட சமர்ப்பிப்புகள் போட்டியிலிருந்து நீக்கப்படலாம்.
7. சமர்ப்பிக்கப்படும் ஓவியங்களை, மேலதிகக் கொடுப்பனவுகள் எதுவுமின்றி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த HNB Finance நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.
8. வெற்றியாளர்களைத் தெரிவுசெய்யும்போது ஆக்கத்திறன் மற்றும் புதுமை, போட்டிப் பொருளுக்குப் பொருத்தமான தன்மை, கலைநயமிக்க வெளிப்பாடு, எடுத்த முயற்சி மற்றும் ஒட்டுமொத்தப் படைப்பின் தரம் என்பன கவனத்தில் கொள்ளப்படும்.
9. 5–7, 8–10 மற்றும் 11–13 என மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் 9 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர். பரிசுகளை வழங்குவது மற்றும் வெற்றியாளர்களைத் தெரிவுசெய்வது தொடர்பில் HNB Finance நிர்வாகத்தின் முடிவே இறுதியான முடிவாகும்.
10. அவசியமான சந்தர்ப்பங்களில் போட்டியைத் திருத்தியமைக்க, தற்காலிகமாக இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய HNB Finance நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.